பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகிய ஓப்போ கே14 பிளஸ் 5ஜி (OPPO K14 Plus 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, IP69K ரேட்டிங் போன்ற பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி குறித்த விவரங்கள் இதோ.
பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.25,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ரூ.1000 கூப்பன் சலுகையும் கிடைக்கிறது. இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் சோலார் ஆரஞ்ச் (Solar Orange), ஸ்டார் ஒயிட் (Star White) உள்ளிட்ட கலர்கள் கிடைக்கின்றன. ரூ.30,000 பட்ஜெட்டை விட மலிவாக பக்கா பீச்சர்களுடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. அப்படி என்னென்ன பீச்சர்கள் உள்ளன.
ஓப்போ கே14 பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14 Plus 5G Specifications): 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. கலர்ஓஎஸ் 16.5 (ColorOS 16.5) கொண்ட மாடலாக இந்த ஓப்போ இருக்கிறது.
மேலும், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Max 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கலர்ஓஎஸ் 16.5 கிடைப்பதால், ஒபிளஸ் கனெக்ட் (O+ Connect), ஏஐலிங்க் பூஸ்ட் 4.0 (AI LinkBoost 4.0), ஏஐ கால் குவார்ட் (AI Call Guard) உள்ளிட்டவை கிடைக்கின்றன.
ஸ்மார்ட்சென்ஸ் எஸ்சி532எச்எஸ் (Smartsense SC532HS) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GC02M1B) சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infared Sensor) கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் மற்றும் 207 கிராம் எடை உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.4 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications
