செப்டம்பர் 29 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ கே14 பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14 Plus 5G Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் பிராசஸர் (MediaTek Dimensity 7360 Max processor) வசதி புதிய ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போனில் உள்ளது. இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் AnTuTu மதிப்பெண்ணைப் பெறுவதோடு, மல்டி-கோர் சிபியு செயல்திறனில் 30% மற்றும் ஜிபியு (GPU) செயல்திறனில் 35% மேம்பாட்டையும் வழங்கும் என ஒப்போ நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
கலர்ஓஎஸ் 16 மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய ஒப்போ போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AI போர்ட்ரெய்ட் க்ளோ, AI ரீகம்போஸ் மற்றும் AI எரேசர் போன்ற பல AI அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி bokeh கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்480 கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.
16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். 5,000mm² சூப்பர்கூல் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் ஆதரவும் இந்த போனில் உள்ளது. மேலும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் உடன் இந்த ஒப்போ போன் வெளியாகும்.

8000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு இந்த போனில டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அல்ட்ரா வால்யூம் மோட் மூலம் ஒலியளவை 300% வரை அதிகரிக்க முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆரஞ்சு, ஒயிட் நிறங்களில் இந்த விற்பனைக்கு வரும். அதேபோல் ரூ.35,000 பட்ஜெட்டில் ஒப்போ கே14 பிளஸ் 5ஜி போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
