செப்.16 குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ கே14 லைட் (OPPO K14 Lite) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. அதேபோல டிசைன், கலர் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த ஓப்போ கே14 லைட் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ கே சீரிஸ் (OPPO K Series) மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், பட்ஜெட் விலையில் இந்த மாடல்கள் வெளியாகும். இப்போது, ஏற்கனவே வெளியாகிய ஓப்போ கே14 ஸ்மார்ட்போனின் லைட் மாடல் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 16ஆம் தேதியன்று இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது.

ஓப்போ இந்தியா தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பேட்டரி, டிஸ்பிளே, டியூரபிலிட்டி மற்றும் ஓஎஸ் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. பர்பிள் மற்றும் பிரவுண் கலர்களில் வெளியாக இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட மாடலாகவும் இந்த ஓப்போ கே14 லைட் இருக்கிறது.
ஓப்போ கே14 லைட் அம்சங்கள் (OPPO K14 Lite Specifications): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 லைட் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஃபெதர் லுக் கொடுக்கும் பேக் பேனலுடன் ஃபெதர் பர்பிள் (Feather Purple) கலரில் கிடைக்க இருக்கிறது. மேலும், ஸ்டோன் பிரவுண் (Stone Brown) கலரிலும் கிடைக்க இருக்கிறது.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 7000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 6 வருடங்களுக்கு ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அல்ட்ரா பிரை டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ கே14 லைட் வெளியாக இருக்கிறது.
அவுட்டோர் விசிபிலிட்டிக்கு ஏற்ற டிஸ்பிளேவாக இது இருக்கும். IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே ஓப்போ இந்தியா தளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கிடைக்க இருப்பதால், இது பட்ஜெட் விலை மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த மார்ச் மாதத்தில் ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்தது. 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கத்தது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைத்தது. 8 எம்பி செல்பீ கேமரா வந்தது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியுடன் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருந்தது. இதைவிட மலிவான விலைக்கு ஓப்போ கே14 லைட் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது. ஆரம்ப விலை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இருக்கலாம். அறிமுக சலுகைகள் போக மேலும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
