Home
Mobile

OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. 13MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் புதிய கே சீரிஸ் மாடலாக ஓப்போ கே14 லைட் (OPPO K14 Lite) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதால் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக, 15W சார்ஜிங், 120Hz டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த ஓப்போ கே14 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

ஓப்போவின் கே சீரிஸ் மாடல்கள் பெரிய பேட்டரி கொண்ட பட்ஜெட் மாடல்களாக களமிறங்கி வருகின்றன. முன்னதாக ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனானது, 7000mAh பேட்டரியுடன் வெளியாகியது. ஆனால், ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைத்தால், பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ப இல்லை. ஆனால், இந்த ஓப்போ கே14 லைட் ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டைவிட மலிவாக உள்ளது.

OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ கே14 லைட் அம்சங்கள் (OPPO K14 Lite Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி72050 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கலர்ஓஎஸ் 16 கிடைப்பதால், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 6.75 இன்ச் (720 x 1570 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் மாடல்களுக்கு நிகராக ஸ்பிளாஷ் டச் (Splash Touch), ஆல்லி-ஹேண்ட் டச் (Oily Hand Touch) மற்றும் குளோவ் டச் (Glove Touch) ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 லைட் கிடைக்கிறது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுல்லாமல், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) சாப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 9 எம்எம் தடிமன் வருகிறது. ஆகலே. ஸ்லிம் ஸ்மார்ட்போன்களை விரும்பும் பிரியர்களுக்கு இந்த ஓப்போ கே14 லைட் சரியாக இருக்காது.

மொத்தமாக 215 கிராம் எடை கொடுத்துள்ளது. 13,700 எம்எம்² கிராபைட் கூலிங் லேயர் (Graphite Cooling Layer) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 லைட் இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. ரூ.1,000 தள்ளுபடியுடன் ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
OPPO K14 Lite With 7000mAh Battery Launched in India Under Rs 17000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X