பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.1,601 ஆஃபரில் 7000mAh பேட்டரி OPPO போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பேட்டரி மற்றும் டியூரபிலிட்டியில் பிரீமியமாக இருக்கும் ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 7000mAh பேட்டரி, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,601 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.24,398 விலைக்கு இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும்.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 5ஜி கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவுட்டோர் மோட் 2.0 மற்றும் க்ளோவ் டச் சாப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (Color OS 15) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ கேம்பூஸ்ட் 2.0 மற்றும் ஏஐ லிங்பூஸ்ட் 3.0 கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 5ஜி கிடைக்கிறது.
டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் அல்ட்ரா வால்யூம் மோட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஏஐ ரீகம்போஸ், ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர், ஏஐ நைட் மோட், ஏஐ போர்ட்ராய்டு, ஏஐ போர்ட்ராய்டு ரீடச், அண்டர்வாட்டர் போட்டோகிராபி உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி வருகிறது. மேலும், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.61 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மொத்தமாக 212 கிராம் எடையில் வருகிறது. ஐபி69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
மேலும், சூப்பர் விசி கூகுள் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ, வை-பை 801.11 ஏசி, ப்ளூடூத் 5.4 மற்றும், என்எப்சி ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
ப்ரிசம் ஒயிட், ப்ரிசம் வயலெட் மற்றும் ஐசி ப்ளூ ஆகிய மூன்று கலர்களில் வாங்கி கொள்ளலாம். 5 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கப்பட்டு உள்ளது. 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நமிடங்கள் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். ஸ்பிரே வாட்டர் ரிமூவல் பீச்சர் கொண்ட மாடலாகவும் இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
