Home
Mobile

பிளிப்கார்ட் அதிர போகுது.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தரமான ஒப்போ 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

ஒப்போ கே14 5ஜி (Oppo K14 5G) ஸ்மார்ட்போன் தற்போது ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் 8-ல் நடைபெற உள்ள பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஒப்போ 5ஜி போன் ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் அதிர போகுது.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் இந்த ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

அதுவும் 6.75 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ கே14 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனுக்கு எஸ்ஜிஎஸ் 5-ஸ்டார் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ மாடல்.

இந்த ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளது.

பிளிப்கார்ட் அதிர போகுது.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ பர்ஃபெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) ஆதரவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO K14 5G will be available at a discounted price during the Flipkart Freedom sale on August 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X