OPPO ஒரே போடு.. 7000mAh பேட்டரிக்கு மேல புது மாடல்.. பிப்.10 க்கு முன்பே குஷி.. டபுள் ட்ரீட் வெச்சாச்சு!
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் டபுள் ட்ரீட்டாக ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போனின் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. 7000mAh பேட்டரி மேல் இதில் கேபாசிட்டி கிடைக்க இருக்கிறது. இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனானது 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்தியாவில் வெளியாகிவிட்டது. ரூ.17,000 பட்ஜெட்டில் கிடைத்தால், விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே, இந்த ஏப்ரலில் ஓப்போ கே14 5ஜி எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மட்டுமே உறுதி செய்யப்பட்டது. மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக இருப்பதும், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதேபோல பேட்டரி, கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டன. இதனால், ஓப்போ கே14 5ஜி வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு முன்பாகவே ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனானது, ப்ளூடூத் எஸ்ஐஜி (Bluetooth SIG) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. ஆகவே, ஓரிரு மாதங்களில் வெளியாவது உறுதியாகும். ஏப்ரல் மாதத்துக்கு முன்பாகவும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவிலும் கட்டாயம் வெளியாக இருக்கிறது.
இதை தவிர மற்ற விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் 7000mAh பேட்டரி கிடைத்ததால், இதில் அதற்கும் மேல் பேட்டரி கேபாசிட்டி கிடைக்கும். ஆகவே, கேமிங் மற்றும் அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் பிரியர்களுக்கு இது பக்கா மாடலாகவும் இருக்கும். இப்போது, ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.
ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 ( ColorOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. ரூ.17,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
ஆகவே, ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். எப்படியும் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் ஆரம்ப விலை இருக்கும். மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கும் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது. ஐபி64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் உள்ளது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொடுக்கப்பட உள்ளது. ஆகவே, டிரினிட்டி என்ஜின், லுமினஸ் ரென்டரிங் என்ஜின் கிடைக்க உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிய பிறகு கே14 5ஜி மாடலின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


Click it and Unblock the Notifications








