விற்பனைக்கு வந்தது OPPO-வின் புது 5G போன்.. ரூ.17000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, IP69.. நம்பி வாங்கலாமா?
ஒப்போ (OPPO) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ கே145ஜி (Oppo K14 5G) மாடலின் இந்திய விற்பனை இன்று (மார்ச் 20) முதல் தொடங்குகிறது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? என்ன ஆபர்? நம்பி வாங்கலாமா? இந்த மாடலுக்கு பதிலாக வேறெந்த ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? இதோ விவரங்கள்:
ஒப்போ கே14 5ஜி விலை: இந்தியாவில் ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.19,999 என்று நிர்ண்யம்செய்யப்பட்டுள்ளது. கடைசியா உள்ள ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.21,999 ஆகும்.

ஒப்போ கே14 5ஜி சேல் ஆபர்: எச்டிஎப்சி (HDFC) வங்கி, ஐசிஐசிஐ (ICICI) வங்கி மற்றும் எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று ஒப்போ அறிவித்து உள்ளது.
ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று (மார்ச் 20) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ இந்தியா (Oppo India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஐசி ப்ளூ (Icy Blue), ப்ரிஸம் வயலெட் (Prism Violet) மற்றும் ப்ரிஸம் ஒயிட் (Prism White) ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஓப்போ கே 14 5ஜி அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.75-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராவை பொறுத்தவரை, ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ஏஐ ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் டூயல்-வியூ வீடியோ மோட், ஏஐ ரீகம்போஸ், ஏஐ பெர்ஃபெக்ட் ஷாட், ஏஐ எரேசர் 2.0 மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் போன்ற அம்சங்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி உள்ளது. இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஒப்போவின் கூற்றுப்படி இது ஒரே சார்ஜில் 18.9 மணிநேரம் யூட்யூப் வீடியோக்களையும், 17.4 மணிநேரம் வரை கூகுள் மேப்ஸ் நேவிகேஷனையும், அல்லது 13 மணிநேரம் வரை வாட்ஸ்அப் வீடியோ கால்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொருத்தாவர, ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இந்த போன் IP66 + IP68 + IP69 ரேட்டிங்களுடன் வருவதாக ஒப்போ நிறுவனம் கூறுகிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 கொண்டு இயங்கும் ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும்.
OPINION - ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? பழைய கே13 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது, புதிய கே14 5ஜி ஆனது நீடித்து உழைக்கும் மேம்பாடுகளை கொண்டுள்ளது. இது IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சான்றிதழுடன் வருகிறது, இவை அனைத்தும் அதன் முந்தைய மாடல்களில் இல்லை. வேப்பர் சேம்பர் கூலிங் என்பதும் இந்த ஸ்மார்ட்போனில் காணப்படும் ஒரு புதிய அம்சமாகும்.
மேலும் இந்த முறை AMOLED பேனல் இல்லை என்றாலும், டிஸ்பிளே சைஸ் ஆனது 6.67 இன்ச்சில இருந்து 6.75 இன்ச்சாக சற்று பெரிதாகியுள்ளது. இருப்பினும், இதில் உள்ள சமரசங்களை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஒப்போ கே13 மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப், 80W சார்ஜர், 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஸ்டாண்டர்ட் 8ஜிபி ரேம் இருந்தன.
ஒப்போ கே14 மாடலும் ரூ.17,999 என்கிற அதே ஆரம்ப விலையை பகிர்ந்துகொண்டாலும், இந்த நான்கு அம்சங்களிலும் பின்தங்கியுள்ளது. இருப்பினும் "உலகளாவிய மெமரி பற்றாக்குறை" என்கிற இந்த சூழலில் ரூ.17,999 க்கு ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக அமையலாம்.
ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வேறெந்த ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்?
1. ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G)
2. விவோ ஒய்400 5ஜி (Vivo Y400 5G)
3. ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G)
4. லாவா அக்னி 4 5ஜி (Lava Agni 4 5G)
5. நத்திங் போன் 3எ லைட் 5ஜி (Nothing Phone 3a Lite 5G)


Click it and Unblock the Notifications








