Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.16,999 க்கு 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் கே சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய ஸ்மார்ட்போனாக ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலைக்கு 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், விசி கூலிங் சிஸ்டம், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்கள் மற்றும் டைமன்சிட்டி 6300 சிப்செட்டை கொடுத்து உள்ளது.

ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G), ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ஆகவே, ஓப்போ கே14 5ஜி மற்றும் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும், ஓப்போ கே14எக்ஸ் 5ஜி முன்னதாகவே வெளியாகிவிட்டது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.16,999 க்கு 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

இதனால், ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு ஓப்போ பிரியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்போது, இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. டிசைனில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போலவே இருக்கிறது. ஆனால், விலை மற்றும் பீச்சர்களில் கூடுதலாக இருக்கிறது. முதலில் முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. 6.75 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கிடைக்கிறது. 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

எஸ்ஜிஎஸ் 5-ஸ்டார் மற்றும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ பர்ஃபெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) கிடைக்கிறது.

45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த கே14 5ஜி ஸ்மார்ட்போனில் அதிக கேபாசிட்டி கிடைக்கிறது. 30 நிமிடங்களில் 1 சதவீதத்தில் இருந்து 37 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஓப்போ கே14 5ஜி விலை (OPPO K14 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. மார்ச் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஓப்போ ஈ-ஸ்டோர் (OPPO e-store) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.1,000 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட உள்ளது. ஐசி ப்ளூ (Icy Blue), ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ப்ரிசம் ஒயிட் (Prism White) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K14 5G 7000mAh Battery Launched in India Sale From March 20 on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X