ரூ.9,870 பட்ஜெட்ல பட்டைய கிளப்பிய OPPO.. 5800mAh பேட்டரி, IP69 ரேட்டிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே13எக்ஸ் (OPPO K13x) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மர்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ கே13எக்ஸ் அம்சங்கள் (OPPO K13x Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஒப்போ கே13எக்ஸ். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் பிராசஸர்(MediaTek Dimensity 6300 6nm processor) உடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 @1072MHz GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் IP66 + IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, குளோனஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ கே13எக்ஸ் போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)ஆதரவும் இந்த போனில் உள்ளது.

5800mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 மூலம் இந்த ஒப்போ கே13எக்ஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஒப்போ கே13எக்ஸ் விலை:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13எக்ஸ் போனின் விலை 799 yuan (இந்திய மதிப்பில் ரூ.9,870)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13எக்ஸ் போனின் விலை 899 yuan (இந்திய மதிப்பில் ரூ.11,105)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13எக்ஸ் போனின் விலை 999 yuan (இந்திய மதிப்பில் ரூ.12,340)


Click it and Unblock the Notifications








