மார்க்கெட்டே திணறப்போகுது.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. வருகிறது புது OPPO போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒப்போ கே13எக்ஸ் போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6,67எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமர என டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி மெமரி + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய ஒப்போ போன் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
புதிய ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ஒப்போ போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 மதிப்பீட்டையும் (IP54 rating for dust and water resistance) கொண்டுள்ளது.
குறிப்பாக MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய ஒப்போ கே13எக்ஸ் 5ஜி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த ஒப்போ போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 6000mAh பேட்டரி உடன் இந்த புதிய ஒப்போ கே13எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.12,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








