அடுத்த OPPO ரெடி.. பட்ஜெட்ல வருது DUAL கேமரா.. டஃப்பஸ்ட் டிசைன்.. பிளிப்கார்ட் சேல் உறுதி.. எந்த மாடல்?
ஓப்போ இந்தியா நிறுவனமானது, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப், டாப் லெவல் வாட்டர் ஃப்ரூப் மற்றும் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் ஆகியவற்றை கொடுத்து வருகிறது. இப்போது, இதேபோல டஃப்பஸ்ட் டிசைனில் ஓப்போ கே13எக்ஸ் (OPPO K13x) மாடலை களமிறக்க இருக்கிறது. இந்த போனின் கலர் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போன் வெளியாகியது. ரூ.12,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போனில் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் கொண்ட ஆர்மர் பாடி கொடுக்கப்பட்டது. ஹீட் ரெசிஸ்டன்ஸ், ஷாக் ரெசிஸ்டன்ஸ் போன்வற்றுக்காக MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டது.

பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் டியூரபிலிட்டி பீச்சர்கள் கிடைத்ததால், மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது, அதேபோல பட்ஜெட்டில் ஓப்போ கே13எக்ஸ் போனை களமிறக்க இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், பிளிப்கார்ட் விற்பனை (Flipkart Sale) மற்றும் கலர் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன.
ஆகவே, மிட்நைட் வயலெட் (Midnight Violet) மற்றும் சன்செட் பீச் (Sunset Peach) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி போனை போலவே கிட்டத்தட்ட அதே கேமரா டிசைனை கொடுக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. வெர்டிகல் கேமரா லைன்-அப் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கிடைக்கிறது.
இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன், ஷாக் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பக்கா வாட்டர் ப்ஃரூப் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இந்த ஓப்போ கே13எக்ஸ் போன் டஃப்பஸ்ட் டிசைன் மற்றும் டியூரபிலிட்டிக்கு முக்கித்துவம் கொடுக்கும் மாடலாக வரும் என்று ஓப்போ குறிப்பிட்டுள்ளது.
ஓப்போ கே13எக்ஸ் அம்சங்கள் (OPPO K13x Specifications): இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். 6.67 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15.0 (ColorOS 15.0) கொடுக்கப்பட இருக்கிறது. இவை மட்டுமே கசிந்துள்ளன.
இந்த நேரத்தில் ஏற்கனவே வெளியான ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் கிடைக்கும் பீச்சர்களில் அப்கிரேட் செய்யப்பட்டு ஓப்போ கே13எக்ஸ் 5ஜி போனின் கிடைப்பது உறுதியாகும். கே12எக்ஸ் 5ஜி போனில் 6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இருப்பினும், பாண்டா கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. ஆகவே, கே13எக்ஸ் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பது உறுதியாகிறது. 32 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5100mAh பேட்டரி வருகிறது. ஆகவே, கே13எக்ஸ் போனில் இதைவிட அதிக கேபாசிட்டி கொண்ட பேட்டரியை எதிர்பார்க்கலாம். அதேபோல கே12எக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.12,999 பட்ஜெட்டில் இருந்ததால், வர இருக்கும் கே13எக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








