Home
Mobile

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.9999-க்கு 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் ஃப்ரீடம் சேல் 2025 (Freedom Sale 2025) சலுகையில் ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓப்போவில் 4 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.9999-க்கு 6000mAh பேட்டரி.. மாடல்?

அதாவது, பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 சலுகையை முன்னிட்டு ரூ.2,000 பேங்க் தள்ளுபடி போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். அதேபோல 6 ஜிபி ரேம் மாடலை ரூ.10,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலை ரூ.12,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டும். மேலும், உங்களது பழைய ஸ்மார்ட்போனுக்கு ஏற்ப எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி மிட்நைட் வயலெட் (Midnight Violet) மற்றும் சன்செட் பீச் (Sunset Peach) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள முடியும்.

இந்த டிசைன் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) பாதுகாப்பை பெற்று கொள்ளலாம். ஒட்டுமொத்த பாடிக்கு MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. மேலும், IP65 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஓப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): இந்த பட்ஜெட்டில் ஹைலைட் பீச்சராக 6000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் யுஐயுடன் கலர்ஓஎஸ் 15 (Color OS 15) உள்ளது.

பாண்டா கிளாஸ் மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் எதிர்பார்க்க முடிகிறது. ஓம்னிவிஷன் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி கோர் சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட், டூயல் சிம் சிலாட் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கிறது. மேலும், 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G NA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ரூ.9,999 பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13x 5G With 50MP Camera Available At Discounted Price in Flipkart Freedom Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X