மார்கெட் காலி.. ரூ.10999 போதும்.. 6000mAh பேட்டரி.. 45W சூப்பர்வூக்.. 50MP கேமரா.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 360 டிகிரி ஆர்மர் பாடி மற்றும் IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) போன் வெளியாகி இருக்கிறது. 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த பட்ஜெட்டில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ப்ரூப் கிடைக்கிறது. ஆகவே, ஷாக் ரெசிஸ்டன்ட், ஹீட் ரெசிஸ்டன்ட் போன்ற பல்வேறு ரெசிஸ்டன்ட்கள் வருகின்றன. அதேபோல 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைப்பதால், டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, அதிக டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். அதேபோல ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள், 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. இப்போது, முழு விரிவான பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): இந்த ஓப்போ போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. கூடுதல் மெமரிக்காக மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் மோட் (HBM Mode) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோ போகஸ்) மற்றும் 2 எம்பி மோனோகுரோம் (Monochrome) கேமரா கிடைக்கிறது. இந்த செகண்டரி கேமராவில் ஃபிக்சட் போகஸ் (Fixed Focus) கிடைக்கிறது.
இந்த ஓப்போ கோ13எக்ஸ் போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 6000mAh பேட்டரி கிடைக்கிறது. மிட்நைட் வயலெட் (Midnight Violet ) அல்லது சன்செட் பீச் (Sunset Peach) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11,999ஆக இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.12,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக ரூ.10,999 ஆரம்ப விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஜூன் 27ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. ஓப்போ மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








