Home
Mobile

மொத்தமா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, பாண்டா கிளாஸ் டிஸ்பிளே, IP65 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. அதேபோல 2 ஜெனரேஷன் ஓஎஸ், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி போன்ற பீச்சர்களும் கிடைக்கிறது. இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,000 பேங்க் தள்ளுபடி போக கிடைக்கிறது.

மொத்தமா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.9,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. இதுபோக MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. அதேபோல டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) வருகிறது.

ஓப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (ARM Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது.

இதில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் பெற்று கொள்ளலாம். பாண்டா கிளாஸ் புரொடெக்சன் மட்டுமல்லாமல், ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 13 எம்பி ரியர் கேமரா கிடைக்கும். ஆனால், இதில் 50 எம்பி கேமரா கொடுத்தது மட்டுமல்லாமல், அதில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கேலக்ஸிகோர் ஜிடி08ஏ8 (GC08A8) சென்சார் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த செல்பீ கேமராவுக்கும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் & 194 கிராம் எடை உள்ளது. சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. மிட்நைட் வயலெட் (Midnight Violet), சன்செட் பீச் (Sunset Peach), பிரீஸ் ப்ளூ (Breeze Blue) மற்றும் மிஸ்ட் ஒயிட் (Mist White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 5ஜி என்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13x 5G With 4GB RAM Available Under Rs 10000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X