Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.11,749 ஆஃபர் விலை.. 6000mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங்.. கம்மி ரேட்டில் OPPO 5ஜி போன்!

ஓப்போ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கம்மியான விலைக்கு கிடைக்கின்றன. இதில் 6000mAh பேட்டரி கொண்ட ஓப்போ மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, தள்ளுபடி விலைக்கு 6000mAh பேட்டரியுடன் வெளியான ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி போக ரூ.12,499 விலைக்கு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,749 விலைக்கு இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.11,749 ஆஃபர் விலை.. 6000mAh பேட்டரி.. மாடல்?

ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி 2 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

மேலும், கலர் ஓஎஸ் 15 (Color OS 15) கொடுத்துள்ளது. 2 ஓஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ஸ்பிளாஷ் டச் டெக்னாலஜி (Splash Touch Technology) கொண்ட டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்டுள்ளது.

6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் அதில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. மேலும், ஜிசி08ஏ8 (GC08A8) சென்சார் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா உள்ளது. மெயின் கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சார் கிடைத்து உள்ளது. கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மிலிட்டரி தரத்துக்கு நீட்டித்து நிலைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சான்றிதழ் பெற்று உள்ளது.

மேலும், டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்க IP65 ரேட்டிங்கை இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கிடைக்கும் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.

ஓரளவுக்கு ஸ்லிம் பாடி எதிர்பார்க்கும்படி 7.99 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. இந்த தடிமனுடன் 194 கிராம் எடை கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்களை கொடுத்துள்ளது.

மிட்நைட் வயலெட் (Midnight Violet), சன்செட் பீச் (Sunset Peach), மிஸ்ட் ஒயிட் (Mist White) மற்றும் பிரீஸ் ப்ளூ (Breeze Blue) ஆகிய நான்கு கலர்களில் இந்த ஓப்போ கோ13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13x 5G With 4GB RAM 6000mAh Battery Price Drop on Flipkart Check Price Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X