Home
Mobile

புதுசு வந்தாச்சு.. பழைய OPPO 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.14,395 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைவான விலையில் வாங்க முடியும்.

புதுசு வந்தாச்சு.. பழைய OPPO 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது ஒப்போ கே13எக்ஸ் 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1604பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர் ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா +2 எம்பி போர்ட்ராய்டு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்போனில் ஜெமினை, ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்டர் மற்றும் ஏஐ ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்களையும் சேர்த்துள்ளது ஒப்போ நிறுவனம்.

6000mAh பேட்டரியை கொண்டுள்ளது ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு SuperVOOC சார்ஜிங் ஆதரவும் உள்ளது. ஆகவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

புதுசு வந்தாச்சு.. பழைய OPPO 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

MIL-STD 810-H இராணுவ-தர சான்றிதழ் மற்றும் நீடித்து நிலைக்கும் ஒரு பயோமிமெடிக் ஸ்பாஞ்ச் ஷாக் அப்சார்ப்ஷன் சிஸ்டம் (Biomimetic Sponge Shock Absorption System) உடன் வருகிறது இந்த போன். 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. பின்பு தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிராக ஐபி65-ரேடிங்கையும் கொண்டுள்ளது இந்த போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. மிட்நைட் வயலெட் (Midnight Violet) மற்றும் சன்செட் பீச் (Sunset Peach) நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13x 5G price slashed as OPPO K14x 5G launched in India: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X