Home
Mobile

OPPO K13x 5G ஓவர்வியூ: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு ரக்கடு ஸ்மார்ட்போனை பார்க்கவே முடியாது!

மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவை பொறுத்தவரை, உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் சிறந்த அம்சங்களை பேக் செய்வதில் அதிக கவனம் செலுத்தும் மறுகையில் சாஃப்ட்வேர் தரத்தில் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கிறார்கள் அல்லது பிளாக்ஷிப் தரத்திலான சாஃப்ட்வேர்-ஐ கொடுத்துவிட்டு அதை தாக்குப்பிடிக்கும் ஹார்ட்வேர்-ஐ கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த விலை வரம்பில் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவம் கவனிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த போக்குக்கு ஒரு விதிவிலக்கு உள்ளது - அதுதான் OPPO K13x 5G ஸ்மார்போன்!

OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது நம்பகமான செயல்திறன், க்ளீன் ஆன மற்றும் ரெஸ்பான்சிவ் ஆன சாஃப்ட்வேர் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பை வழங்குவதன் மூலம் ஒரு அரிய சமநிலையை தருகிறது - அதுவும் அனைவரும் அணுகக்கூடிய விலையில். இது "அம்சங்கள் தொடர்பான" சில சமரசங்களை செய்யும் சிந்தனையின் கீழ் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் - தனித்து நிற்கிறது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

எக்ஸ்ட்ரீம்களுக்காக உருவாக்கப்பட்டது:

OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது உடையக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் பளபளப்பான அம்சங்களால் ஆதிக்கம் செலுத்தும் பிரிவில் - நீடித்துழைப்புக்கு மிகவும் தேவையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அதன் தனித்துவமான மேம்பாடுகளில் ஒன்று, அதிக வலிமை கொண்ட விண்வெளி-தர ஏஎம்04 அலுமினிய அலாய் சேஸின் பயன்பாடு ஆகும், இது தேவையற்ற எடையை சேர்க்காமல் கடினத்தன்மையை அதிகரிக்கிறது. ஆனால் அதோடு நிற்கவில்லை - OPPO நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை 360° டேமேஜ்-புரூஃப் ஆர்மர் பாடியால் "கவர்" செய்துள்ளது. மேலும் இது கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸால் வலுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஐபி65 ரேட்டட் நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும் கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான புதுமை அதன் ஸ்பான்ஞ்-பேஸ்டுஷாக் அப்சார்ப்ஷன் சிஸ்டமில் உள்ளது, இது ஸீ ஸ்பான்ஜ்களின் இயற்கையான மீள்தன்மையால் ஈர்க்கப்படுகிறது. இந்த பயோமிமெடிக் அடுக்கு ஆனது ஸ்மார்ட்போனின் தாக்க அழுத்தத்தை சிதறடிக்க உதவுகிறது. மேலும் சேதத்தை 90% வரை குறைக்கிறது மற்றும் கடுமையான வீழ்ச்சிகளின் போது கூட உள் கூறுகள் பாதுகாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. முன்பக்கத்தில், OPPO K13x 5G ஸ்மார்ட்போனானது கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸை பயன்படுத்துகிறது, இது வழக்கமான பொருட்களை விட 160% சிறந்த தாக்க எதிர்ப்பை வழங்குகிறது.

நிஜ உலக பயன்பாட்டில், நடைபாதையில் தற்செயலான வெய்ஸ்ட்-லெவல் டிராப்பை இந்த ஸ்மார்ட்போன் எளிதில் தாங்கி, கீறல் அல்லது செயல்திறன் சிக்கல்களை சந்திக்காமல் பார்த்துக்கொள்கிறது. இதன் ஐபி65 ரேட்டட் பாதுகாப்பு மற்றும் சீல் செய்யப்பட்ட காம்போனென்ட்களுக்கு ஒரு பெரிய நன்றி - இது லேசான மழையிலும் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்கும்.

எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் இராணுவ-தரம் மற்றும் எஸ்ஜிஎஸ் கோல்ட் டிராப் சான்றிதழ்களால் ஆதரிக்கப்படும் OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் 5ஜி பிரிவில் நீங்கள் பெறக்கூடிய ரக்கடு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அமைகிறது. மேலும், இந்த போன் ஒரு ஸ்பெஷல் ஆன்டி-டிராப் ஷீல்ட் கேஸுடன் தொகுக்கப்பட்டுள்ளது, இது பெரும்பாலான பட்ஜெட் போன்களில் நாம் காணும் ஸ்டாண்டர்ட் ட்ரான்ஸ்பிரென்ட் சிலிக்கான் கவரை விட அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது கிரானைட் பரப்புகளில் 1.1 மீ முதல் 1.3 மீ வரையிலான உயரங்களிலிருந்து வரும் வீழ்ச்சிகள், 1.4 மீட்டருக்கு மேல் தீவிர வீழ்ச்சிகள் மற்றும் 1.2 மீட்டரிலிருந்து 30 - 40 ஸ்க்ரீன்-டவுன் தாக்கங்களை தாங்கும் வகையில் கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் செயல்பாடு அல்லது கட்டமைப்பு ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல், அதன் விதிவிலக்கான நீடித்துழைப்பை காட்டுகிறது. OPPO, K13x 5G ஸ்மார்ட்போனிற்கு நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கும் உள்ளது. இது மேஜர் ஓப்பனிங்-ஐ மூடுவதிலும், ஃபோம் அடிசிவ் தன்மையுடன் முக்கிய கூறுகளை வலுப்படுத்துவதிலும் கூடுதல் முயற்சியை செய்யும்.

கரடுமுரடான கட்டமைப்பு இருந்தபோதிலும், OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் வயலட் மற்றும் சன்செட் பீச் என்கிற அழகான மற்றும் நேர்த்தியை பினிஷ்களுடன் வருகிறது. துல்லியமான சிஎன்சி வேலைப்பாடு மற்றும் யுவி அமைப்பு பரிமாற்றம் ஆகியவைகள் ஒரு குறிப்பிடத்தக்க பளபளப்பான-மேட் வேரியண்ட்டை வழங்குகின்றன. அதே நேரத்தில் ஏஎப்-கோட்டட் கேமராவானது நீர் மற்றும் ஸ்மட்ஜ்-ப்ளெண்டிங்கை க்ளீன் ஆன வடிவமைப்புடன் வழங்குகிறது. மேலும், இது ஒரு வசதியான மற்றும் இலகுரக வடிவமைப்பையும் கொண்டுள்ளது, வெறும் 194 கிராம் எடையும் 7.9 மிமீ தடிமனுக்கும் குறைவான அளவையும் கொண்டுள்ளது. அதன் இராணுவ தர சான்றிதழ், புதுமையான ஷாக் ப்ரூஃப் மற்றும் க்ளீன் ஆன டிசைன் ஆகியவற்றுடன், OPPO K13x 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் 5ஜி பிரிவில் மிகவும் நீடித்த மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக தனித்து நிற்கிறது.

நாள் முழுவதும் சகிப்புத்தன்மையை அனுபவிக்கவும்:

சுவாரஸ்யமான நீடித்துழைக்கும் தன்மையை தாண்டி OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 6000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது சமரசம் இல்லாமல் 1 நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்க முயற்சிக்கிறது. OPPO நிறுவனம் 56.8 மணிநேர ஸ்கிரீன்-ஆஃப் காலிங், யூட்யூபில் 19.3 மணிநேர ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் அல்லது 638 மணிநேர ஸ்டேண்ட்பை நேரத்தை உறுதியளிக்கிறது. எங்கள் சோதனையில், OPPO K13x 5G ஸ்மார்ட்போன் அதிக பயன்பாட்டின் கீழ், ஒரு நாள் முடிவில் அதன் பேட்டரியில் 87% மட்டுமே பயன்படுத்தி இருந்தது. இதில் ஒரு மணிநேரம் கேமிங், குறைந்தது இரண்டு மணிநேரம் சோஷியல் மீடியா ப்ரவுஸிங் மற்றும் யூட்யூபில் வீடியோக்களைப் பார்ப்பது ஆகியவைகளும் அடங்கும்.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

நாள் முழுவதும் பேக்கப் தரும் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W SUPERVOOCTM பிளாஸ் சார்ஜ் வசதியும் இந்த போனில் உள்ளது. இது 21 நிமிடங்களில் 30 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்கிறது. அதேபோல் 91 நிமிடங்களில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக OPPO K13x 5G வேகமான சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால், குறைந்த பேட்டரி பதட்டத்தைத் தணிக்கிறது.

ஒப்போ நிறுவனம் தரமான மற்றும் நீண்ட காலம் தங்கும் வகையில் K13x போனில் பேட்டரியை அமைத்துள்ளது. இதில் உள்ள பேட்டரி 1,700 சார்ஜ் சுழற்சிகளுக்குப் பிறகும் அதன் அசல் திறனில் 80 % க்கும் அதிகமாகத் தக்கவைத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தோராயமாக ஐந்து வருட பயன்பாட்டிற்கு சமம். குறிப்பாக இந்த போனின் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆனது ஐந்து வருட ஆயுட்கால உத்தரவாதத்துடன் வருகிறது. பின்பு OPPO K13x 5G பேட்டரி செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

AI கேமரா மேஜிக்
OPPO K13x 5G ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி AI டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதுவும் இதன் 50எம்பி OV50D பிரைமரி சென்சார் ஆனது ஆட்டோஃபோகஸை ஆதரிக்கிறது மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் வசதியும் இதனுடன் வருகிறது. அதேபோல் f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8எம்பி செல்பி கேமராவும் இந்த போனின் முன்புறத்தில் உள்ளன.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

கம்மி பட்ஜெட்டில் K13x 5G போன் வெளிவந்தாலும், இதில் உள்ள கேமரா மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதுவும் போர்ட்ரெய்ட் மோட் போன்ற தனித்துவமான AI அம்சங்களும் இந்த போனில் உள்ளன. சாதாரண புகைப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்குத் தகுந்த படங்கள் என அனைத்தையும் இதன் மூலம் துல்லியமாக எடுக்க முடியும். அதேபோல் இதன் செல்பி கேமராவும் மேம்பட்ட புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

ஒப்போவின் AI Clarity Enhancer மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது இது சமரசம் செய்யாமல் தெளிவான படங்களை எடுக்க உதவுகிறது. குறிப்பாக இதன் மூலம் ஜூம் செய்யப்பட்ட காட்சிகளை மேலும் மேம்படுத்த முடியும். அதேபோல் இதில் உள்ள AI Eraser 2.0 ஆனது புகைப்படத் தடுமாற்றங்கள் அல்லது கவனச்சிதறல்களை அகற்றி தெளிவான படங்களை கொடுக்க உதவுகிறது. மேலும் OPPO K13x 5G ஒரு ஸ்மார்ட் கேமரா அனுபவத்தை வழங்குகிறது. இதன் கேமரா அனைவரையும் வியக்க வகையில் இருக்கிறது.

மென்மையான மற்றும் மேம்பட்ட செயல்திறன்
OPPO K13x 5G ஆனது 6nm திறன் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 8GB LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக K13x மூலம் அனைத்து பணிகளையும் எளிதாக கையாள முடியும். அதேசமயம் அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் எந்த இடையூறும் இல்லாமல் Call of Duty பயன்படுத்த முடியும். அதுவும் 8ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

OPPO K13x பட்ஜெட் விலையில் மிகவும் ஈர்க்கக்கூடிய எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளதால் தனித்து நிற்கிறது. இது குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இந்த போனில் உள்ளது. இந்த பேனல் சூப்பர்-ஸ்மூத் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது. அதுவும் 60 ஹெர்ட்ஸ், 90 ஹெர்ட்ஸ், 120 ஹெர்ட்ஸ் ஆகவும் டிஸ்பிளே இயக்க முடியும்.

K13x 5G ஆனது டிஸ்ப்ளே பிரைட்னஸ் வசதியில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி இந்த போனில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இதன் டிஸ்பிளேவை நேரடி சூரிய ஒளியில் கூட தெளிவான பார்க்க முடியும். மேலும் இது ஸ்பிளாஸ் டச் போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. கையில் ஈரமான நிலையில் கூட இதஸ் டிஸ்பிளேவை எளிதாக இயக்க முடியும். அதேபோல் கையுறைகளை அணிந்திருக்கும் போது சிரமமின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

எங்கும், எல்லா இடங்களிலும் சீம்லெஸ் கனெக்டிவிட்டி
OPPO K13x 5G ஆனது மாடர்ன் யூசர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பீச்சர்களுடன் கூடிய இணைப்பிற்கு ஒரு பெஞ்ச்மார்க்கை செட் செய்கிறது. இது டூயல் சிம் செயல்பாடு, வை-பை 5 (802.11 ஏசி), லோவ் எனர்ஜி மோடுடன் கூடிய ப்ளூடூத் 5.4 ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த டிவைஸ் ஆட்டோமெட்டிக் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ மோடுடன் கால் வசதியை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்கள் அன்பிளக்டு செய்யப்படும்போது எளிதாக ஸ்பீக்கர்ஃபோனுக்கு மாறுகிறது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

இதன் பிரத்யேக நெட்வொர்க் ஆப்டிமைசேஷன் ஆனது ஸ்ட்ராங்க் சிக்னல்கள் மற்றும் வேகமான டேட்டா வேகத்தை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் அட்வான்ஸ்டு அல்கோரிதம்களானது விதிவிலக்கான சேனல் செயல்திறனுக்கும் உத்தரவாதம் கொடுக்கின்றன. அவுட்டோர் யூசர்கள், 300% வால்யூம் பூஸ்ட், ஆம்பிளிஃபையிங் ரிங்டோன்கள் மற்றும் நோட்டிபிகேஷன்கள் ஆகியவற்றால் பயனடைகிறார்கள், இதனால் எந்த அலெர்ட்டும் தவறவிடப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக, OPPO K13x 5G ஆனது எந்தவொரு சூழ்நிலைக்கும் நம்பகமான, இன்டலிஜென்ட் கனெக்டிவிட்டியை வழங்குகிறது.

ஒரு ரீஃபைன்டு யூசர் எக்ஸ்பீரியன்ஸ்
சாப்ட்வேர் பக்கத்தில், OPPO K13x 5G ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 15 மூலம் இயங்குகிறது. OPPO இன் சாப்ட்வேர் ஆனது தொடர்ந்து பீச்சர்கள் மற்றும் கஸ்டமைசேஷன்களை வழங்குகிறது. அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் கிளீன் இன்டர்பேஸை கொடுக்கிறது. K13x ஆனது பல மொழிகளில் உங்கள் கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளிக்க கூகிள் ஜெமினி AI அசிஸ்டன்ட்டை கொண்டுள்ளது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

OPPO K13x 5G ஆனது டிரினிட்டி என்ஜினை கொண்டுள்ளது, இது கலர்ஓஎஸ் 15 இல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஃப்ளூயென்சி மற்றும் பவர் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. மெமரி மேனேஜ்மென்ட் மற்றும் தெர்மல் கன்ட்ரோல் என்ஹான்ஸ் நம்பகத்தன்மையை இது மேம்படுத்துகிறது, இதனால் K13x ஆனது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த நீடித்து உழைக்கும் ஸ்மார்ட்போன் ஆனது பர்ஃபாமென்ஸ் மற்றும் எஃபிசியென்சியை சமநிலைப்படுத்தி, நவீன தேவைகளுக்கு ஏற்ப நிலையான எக்ஸ்பீரியன்ஸ் வழங்குகிறது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

முடிவுரை
பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனிலிருந்து யூசர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை OPPO K13x 5G மறுவரையறை செய்கிறது. விலையை அதிகரிக்காமல், அதன் முந்தைய மாடல்களை விட - குறிப்பாக நீடித்து உழைக்கும் தன்மை, பேட்டரி ஆயுள் மற்றும் AI- என்ஹான்ஸ்டு பீச்சர்களில் - இது குறிப்பிடத்தக்க அப்கிரேட்களை கொண்டுவருகிறது.

இதன் மிலிட்டரி கிரேடு பில்ட், அட்வான்ஸ்டு ஷாக் அப்சார்ப்ஷன், ஐபி65 ரேட்டிங் மற்றும் கிரிஸ்டல் ஷீல்டு கிளாஷ் ஆகியவற்றுடன், இது நிஜ உலக தேய்மானத்தை தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கேபபிள் கொண்ட டைமன்சிட்டி 6300 சிப்செட்டால் இது இயக்கப்படுகிறது மற்றும் வைப்ரென்ட்டான 120Hz டிஸ்பிளேவுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த போன் நம்பகமான தினசரி பர்ஃபாமென்ஸ் மற்றும் திடமான கேமிங் சாப்ஸ்களை வழங்குகிறது.

OPPO இன் ரீஃபைன்டு செய்யப்பட்ட கலர்ஓஎஸ் 15, AI கிளாரிட்டி என்ஹான்சர் மற்றும் AI எரைசர் 2.0 போன்ற AI டூல்களாக மேம்படுத்தப்பட்டு, தடையற்ற மற்றும் இன்டலிஜென்ட்டான யூசர் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது. நீங்கள் ஒரு பவரான யூசராக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண புகைப்படக் கலைஞராக இருந்தாலும் சரி, அல்லது ஸ்டைலாலுடன் கூடிய கடினமான ஸ்மார்ட்போனை தேடுபவராக இருந்தாலும் சரி, OPPO K13x 5G இல் நீங்கள் சமரசம் செய்ய தேவையில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது - இது 15K க்கும் குறைவான டப்பஸ்ட் மற்றும் டியூரபிள் டிவைஸ்களில் ஒன்றாகும்.

OPPO K13x 5G விலை மற்றும் ஆஃபர்கள்
இந்தியாவில் OPPO K13x இன் 4ஜிபி/128ஜிபி மாடலின் விலை ரூ.11,999 இலிருந்து தொடங்குகிறது. கூடுதலாக, இந்த ஹேண்ட்செட்டை 6ஜிபி/128ஜிபி மற்றும் 8ஜிபி/128ஜிபி கான்ஃபிகிரேஷன்களிலும் வாங்கலாம், இவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நுகர்வோர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி 4ஜிபி & 6ஜிபி வேரியண்ட்களில் உடனடியாக ரூ.1,000 தள்ளுபடியையும், 8ஜிபி மாடலில் ரூ.2,000 தள்ளுபடியையும் பெறலாம். வாடிக்கையாளர்கள் K13x-ஐ 3 மாதங்கள் வரை நோ காஸ்ட் ஈஎம்ஐ பேமெண்ட்டிலும் தேர்வு செய்யலாம். OPPO K13x 5G இந்தியாவில் OPPO இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது.

OPPO K13x 5G: ரூ.15000 பட்ஜெட்டில் இப்படி ஒரு போனை பார்க்கவே முடியாது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13x 5G Overview: New Gold Standard for Durability and Reliability in the Sub-15K Segment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X