ரூ.10,999 ஆபர் விலையில் விற்பனை ஆரம்பம்.. OPPO-வின் புது 5G போன்.. 6000mAh பேட்டரி, Sponge Shock சிஸ்டம்!
ஒப்போ (Oppo) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று முதல் (ஜூன் 27) தொடங்குகிறது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 க்கும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும் மற்றும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள்: ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் வயலட் மற்றும் சன்செட் பீச் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் இன்று (ஜூன் 27 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்போ இந்தியா ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்
ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீதான ஆபர்கள்: இந்த ஸ்மார்ட்போனின் முதல் நாள் விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளுடன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் ஆப்ஷன்களில் ரூ.1,000 உடனடி தள்ளுபடியும், 8ஜிபி ரேம் ஆப்ஷனில் ரூ. 2,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்கண்ட தள்ளுபடியின் கீழ், மேற்கண்ட ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டரோஜ் ஆப்ஷன்களின் விலைகளை முறையே ரூ.10,999, ரூ.11,999 மற்றும் ரூ.12,999 ஆக குறைக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் மூன்று மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கூட கிடைக்கும்.
ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர் ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்டு இயங்குகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1604 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே ஸ்பிளாஸ் டச் மற்றும் க்ளோவ் டச் தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை, இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்போனில் ஜெமினை, ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்டர் மற்றும் ஏஐ ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு ஏஐ-தரவு அம்சங்களையும் சேர்த்துள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் எப் /2.0 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரோபோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் ஊடுருவலுக்கு எதிராக ஐபி65-ரேடிங்கையும் கொண்டுள்ளது மற்றும் MIL-STD 810-H இராணுவ-தர சான்றிதழ் மற்றும் நீடித்து நிலைக்கும் ஒரு பயோமிமெடிக் ஸ்பாஞ்ச் ஷாக் அப்சார்ப்ஷன் சிஸ்டம் (Biomimetic Sponge Shock Absorption System) உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications