பட்ஜெட் விலையில் புது OPPO 5ஜி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே13எஸ் (OPPO K13s) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ கே13எஸ் அம்சங்கள் (OPPO K13s Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 × 1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் உடன் ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 மூலம் இந்த ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)வசதியும் இந்த போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா (OV50D40 sensor)+ 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன். மேலும் IP66 + IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒப்போ போன். பின்பு யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற ஆடியோ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி உடன் ஒப்போ கே13எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் எடை 195 கிராம் ஆகும்.

5ஜி, டூயவ் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, குளோனஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய ஒப்போ போனில் உள்ளன. வெள்ளை மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ஒப்போ போன் வெளிவந்துள்ளது.
ஒப்போ கே13எஸ் விலை:
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13எஸ் போனின் விலை 1499 yuan (இந்திய மதிப்பில் ரூ.18,515)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜி மெமரி கொண்ட வேரியண்ட் விலை 1599 yuan (இந்திய மதிப்பில் ரூ.19,750)-ஆக உள்ளது. தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








