பொளக்குது விற்பனை.. ரூ.6,000 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மட்டுமல்லாமல், கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இதுவரையில் கிடைக்காத விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்-பில்ட் கூலிங் ஃபேன், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த ஓப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.3,000 விலை குறைப்பு போக பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஓப்போ கே13 டர்போ அம்சங்கள் (OPPO K13 Turbo Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதில் மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்ட இருக்கிறது. மொத்தமாக ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் (AGC DT Star D+) கிளாஸ் புரொடெக்டன் கிடைக்கிறது.
இந்த ஓப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கிடைக்கிறது. இதுபோக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. பேட்டரியில் கேமிங் பிரியர்களை மிரளவிட்டுள்ளது. ஆகவே, 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இதில் ஏஐ கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஆகவே, ஏஐ எடிட்டர் 2.0 (AI Editor 2.0), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்சன் ரிமூவர் (AI Reflections) மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர் (AI Clarity) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆகவே, பர்சோனல் கேம் அசிஸ்டன்ட், அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த ஓப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போனில் IPX6 ரேட்டிங், IPX8 ரேட்டிங் + IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, ஸ்பிளாஷ் டச் (Splash Touch) மற்றும் குளோவ் மோட் (Glove Mode) ஆகிய சப்போர்ட் டிஸ்பிளேவில் கிடைக்கிறது. இதுபோக 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் கொடுக்கும்படி ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி கிடைக்கிறது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linera Motor) கிடைக்கிறது. மிட்நைட் மேவ்ரிக் (Midnight Maverick), ஒயிட் க்நைட் (White Knight), பர்பிள் பாண்டம் கலர்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








