Home
Mobile

OPPO ஒரே போடு.. ரூ.22,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் அறக்க பறக்கும்படியான பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) களமிறங்கி இருக்கிறது. ஆக்டிவ் கூலிங் ஃபேன், வேப்பர் சேம்பர் பீச்சர்கள் மற்றும் டைமன்சிட்டி 8450 சிப்செட் போன்ற கேமிங் பிரியர்களுக்கான மாடலாகவே இது இருக்கிறது. ஓப்போ கே13 டர்போ போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரேசிங் ஃபங்ஷன் டிசைன் (Racing Fuction) தொடங்கி கூலிங் என்ஜின் (Cooling Engine), டைடல் என்ஜின் (Tidal Engine) போன்ற பிரத்யேக பீச்சர்கள் அனைத்தும் கேமிங் பர்ஃபாமென்ஸ கொடுக்கவே வருகின்றன. கூலிங் என்ஜின் மூலம் செல்ப்-டெவலப்டு கூலிங் ஃபேன் கிடைக்கிறது. இதன் மூலம் ஹீட் கன்ட்ரோல் (Heat Control) கொடுக்கப்படுகிறது.

OPPO ஒரே போடு.. ரூ.22,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

அதேபோல டைடல் என்ஜின் மூலம் சிப்செட் லெவல் பர்ஃபாமென்ஸ் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. 7000mAh பேட்டரி கிடைப்பதால், ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் மற்றும் 7000 எம்எம் சூப்பர் வேப்பர் சேம்பர் கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாக கேமிங் பர்ஃபாமென்ஸ் லேக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும். ரேசிங் டிசைனில் மூன்று கலர்களில் வெளியாகி இருக்கிறது.

பிளாக் வாரியர் (Black Warrior), பர்பிள் நம்பர் 1 (Purple No. 1) மற்றும் கிநைட் ஒயிட் (Knight White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது.

ஓப்போ கே13 டர்போ அம்சங்கள் (OPPO K13 Turbo Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6.80 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

OPPO ஒரே போடு.. ரூ.22,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

இந்த டிஸ்பிளேவில் 453 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி பிளாக் & ஒயிட் கேமரா கிடைக்கிறது.

இந்த ஓப்போ கே13 டர்போ போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மிட்-பிரீமியம் மாடல்களுக்கு நிகராக IPX6 ரேட்டிங், IPX8 ரேட்டிங் மற்றும் IPX9 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. விலை பார்ப்போம்.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.21,633ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,035ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,642ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. ஜூலை 25ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 Turbo With 50MP Camera 12GB RAM Launched Sale From July 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X