மார்க்கெட்டே அதிர போகுது.. 50எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. புதிய Oppo போன் ரெடி.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ கே3 டர்போ (Oppo K13 Turbo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ கே3 டர்போ அம்சங்கள் (Oppo K13 Turbo specifications): 6.8-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1280 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
தரமான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 Chipset) உடன் இந்த புதிய ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் ஆக்டிவ் கூலிங் ஃபேன் (built-in active cooling fan) வசதியும் இந்த ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதியுடன் அறிமுகமாகும். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தவலின்படி, ஒப்போ கே3 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: jagran


Click it and Unblock the Notifications