Home
Mobile

ஆக.11-க்கு அப்புறம் இதுதான்.. ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன்.. 7000எம்எம் விசி கூலிங்.. ஓப்போ கே13 டர்போ சீரிஸ்!

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ கே13 டர்போ சீரிஸ் (OPPO K13 Turbo Series) மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக இந்த சீரிஸ் இருக்கப் போகிறது. இந்த மாடல்கள் ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகி விட்டதால், அதன் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஓப்போ கே13 டர்போ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் கேமிங் பிரியர்களிடையே கூலிங் ஃபேன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு கேமிங் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிய இருந்தும், கூலிங் ஃபேன் கொண்ட மாடல் நேரடியாக வெளியாகவில்லை. ரெட்மேஜிக் ஸ்மார்ட்போன்களில் கூலிங் ஃபேன் இருக்கிறது ஆனால், அவை குளோபல் மார்க்கெட் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கிறது.

ஆக.11-க்கு அப்புறம் இதுதான்.. ஸ்மார்ட்போனில் கூலிங் ஃபேன்.. மாடல்?

ஆகவே முதல்முறையாக நேரடியாக இந்திய மார்க்கெட்டுக்கு கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக இந்த ஓப்போ கே13 டர்போ சீரிஸ் கிடைக்க இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் வெளியாகும் என்று ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீன மார்க்கெட்டில் வெளியாகிய மாடல்களில் கிடைத்த அதே டிசைன் மற்றும் கலர்களுடன் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மைக்ரோசைட் ஓபன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வெளியீட்டுக்கு பிறகு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு கூலிங் சிஸ்டம் சிப்செட் மற்றும் கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த ஓப்போ கே13 டர்போ சீரிஸ் மாடல்களில் சீன வேரியண்ட்களில் கிடைத்த அதே பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

இந்த சீரிஸில் 2 மாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) ஆகிய மாடல்கள் இதில் இருக்கின்றன. இதில் தனித்தனியே பீச்சர்கள் உறுதி செய்யப்படவில்லை மொத்தமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்திய மார்கெட்டில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் இவை மட்டுமே.

ஓப்போ கே13 டர்போ சீரிஸ் அம்சங்கள் (OPPO K13 Turbo Series Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எஸ்ஓசி (Snapdragon 8s Gen 4 SoC) கிடைக்க இருக்கிறது. இது ஓப்போ கே13 டர்போ ப்ரோ மாடலில் கிடைக்க இருக்கிறது. இரண்டு மாடல்களிலும் மெயின் கேமராவுக்கு கீழே கூலிங் ஃபேன் இடம்பெற இருக்கிறது. இந்த பேன் மூலம் ஏர் வால்யூம் அதிகரிக்கப்பட்டு ஹீட் கன்ட்ரோல் கொடுக்கப்படுகிறது.

அதேபோல 7000mm வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. சில்வர் கிநைட் (Silver Knight), பர்பிள் பாண்டம் (Purple Phantom) மற்றும் மிட்நைட் மேவரிக் (Midnight Maveric) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட கூலிங் ஃபேன், சிப்செட் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானவை. இப்போது, சீன வேரியண்ட்களில் கிடைத்த பீச்சர்களை பார்க்கலாம்.

ஓப்போ கே13 டர்போ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் சிப்செட், 50 எம்பி மெயின் கேமரா, 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. டர்போ ப்ரோ போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட், 50 எம்பி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி கிடைக்கிறது. டர்போ மாடல் ரூ.25,000 பட்ஜெட்டிலும், ப்ரோ மாடல் ரூ.30,000 பட்ஜெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 Turbo Series With Cooling Fan to Launch India on August 11 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X