Home
Mobile

மொத்த மார்கெட் அதிருது.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (OPPO K13 Turbo Pro 5G) மற்றும் ஓப்போ கே13 டர்போ 5ஜி (OPPO K13 Turbo 5G) ஆகிய மாடல்கள் இங்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் கேமிங் பிரியர்களும் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். ஏனென்றால், இந்த மாடல்களில் 7000mAh பேட்டரி மற்றும் இன்-பில்ட் கூலிங் ஃபேன் கிடைக்க இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி மற்றும் ஓப்போ கே13 டர்போ 5ஜி ஆகிய மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டன. பட்ஜெட்டில் இன்-பில்ட் கூலிங் ஃபேன் போன்ற பீச்சர்களை கொடுத்ததால், மற்ற நாடுகளில் இருக்கும் கேமிங் பிரியர்களையும் தட்டித்தூக்கியது. ஆகவே, இந்தியாவிலும் இந்த மாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகாமாகவே இருக்கிறது.

மொத்த மார்கெட் அதிருது.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ கே13 5ஜி போன் ஏற்கனவே அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் அடிமட்ட பட்ஜெட்டில் இங்கு வெளியானது. ஆகவே, ஓப்போ கே13 டர்போ ப்ரோ மற்றும் ஓப்போ கே13 டர்போ மாடல்களும் கட்டாயம் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை உறுதிப்படுத்தும்படி பிளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்களுக்காக மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

இதில் பீச்சர்கள், டிசைன் அல்லது தேதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஓப்போ மாடல்களில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியான அதே பீச்சர்களுடன் மட்டுமே இங்கும் வெளியாகி இருக்கின்றன.

ஆகவே, இந்த ஓப்போ கே13 டர்போ ப்ரோ மற்றும் ஓப்போ கே13 டர்போ ஆகிய மாடல்களின் பீச்சர்களும் சீனாவில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். அதேபோல சீன மார்கெட்டில் இந்த மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

மொத்த மார்கெட் அதிருது.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO K13 Turbo Pro 5G Specifications): இந்த ஓப்போவில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட், அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிங் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பெரிய 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. மேலும், இன்-பில்ட் கூலிங் ஃபேன் வருகிறது. இந்த ஃபேன் மூலம் ஹீட் கன்ட்ரோல் கொடுக்கப்படுகிறது. 50 எம்பி மெயின் + 2 எம்பி மோனோகுரோம் கேமரா உள்ளது.

ஓப்போ கே13 டர்போ 5ஜி அம்சங்கள் (OPPO K13 Turbo 5G Specifications): இந்த போனின் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா ஆகிய பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால், வேறு சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது.

ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.24,000 பட்ஜெட்டிலும், ஓப்போ கே13 டர்போ 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.21,000 பட்ஜெட்டிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சீன மார்கெட் விலையாகும். இதில் சிறு மாறுதல்களுடன் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இவை பட்ஜெட் மாடல்களாகவே வர இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 Turbo Series India Launch Confirmed To Be Available on Flipkart Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X