நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OPPO 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஸ்மார்ட்போன் ஆனது நாளை சீனாவில் (ஜூலை 21) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் படங்கள், விலை, அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ கே13 டர்போ ப்ரோ அம்சங்கள் (Oppo K13 Turbo Pro specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4
(Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கப்படும்.

6.8-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1272 x 2800 பிக்கல்ஸ்,1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் IPX8 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.
RGB-லைட் டர்போ கூலிங் ஃபேன் ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். இதுதவிர மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ஒப்போ கே13 டர்போ ப்ரோ போன் ரூ.29,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: freejobalert


Click it and Unblock the Notifications








