Home
Mobile

Oppo கே13 டர்போ ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. என்ன விலை?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒப்போ அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இப்போது இந்த புதிய ஒப்போ போன்களின் விலை மற்றும் அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ கே13 டர்போ ப்ரோ அம்சங்கள் (Oppo K13 Turbo Pro Specifications): 6.80-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

Oppo கே13 டர்போ ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கலர்ஓஎஸ் 15.0.2. (ColorOS 15.0.2.) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஒப்போ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவுடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7,000 mm² VC கூலிங் சேம்பர் சிஸ்டமை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் IPX9 வாட்டர் புரொடெக்சன் (IPX9 water protection) ஆதரவுடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ வெளிவந்துள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த ஒப்போ கே13 டர்போ ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 208 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

7000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

Oppo கே13 டர்போ ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் சில்வர் நைட் (Silver Knight), பர்பிள் பாண்டம் (Purple Phantom) மற்றும் மிட்நைட் மேவரிக் (Midnight Maverick) நிறங்களில் இந்த புதிய ஒப்போ போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13 டர்போ ப்ரோ போனின் விலை ரூ.37,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.39,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளிப்கார்ட், ஒப்போ இந்திய இ-ஸ்டோர் மற்றும் ஆப்லைன் கடைகளில் இந்த போன் வாங்க கிடைககும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் போனின் வெளிப்புற குளிர்ச்சிக்காக டர்போ பேக் கிளிப்பையும் ஒப்போ அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 3,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K13 Turbo Pro launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X