ஜூலை 21 உறுதி.. 50எம்பி கேமரா.. 6500mAh பேடடரி.. வருகிறது புதிய Oppo போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே13 டர்போ சீரிஸ்-ஐ வரும் ஜூலை 21 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒப்போ கே13 டர்போ (Oppo K13 Turbo) மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் இந்த போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஒப்போ கே13 டர்போ, ஒப்போ கே13 டர்போ ப்ரோ போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ கே13 டர்போ ப்ரோ அம்சங்கள் (Oppo K13 Turbo Pro specifications): 6.8-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கப்படும். அதேபோல் அனைத்து கேமிங் ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் IPX8 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் 6500mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ஒப்போ கே13 டர்போ ப்ரோ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








