Home
Mobile

மொத்த மார்கெட் மிரளும் புது OPPO போன்.. 7000mAh பேட்டரி.. முதல்முறை COOLING ஃபேன்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் முதல் முறையாக கூலிங் ஃபேன் கொண்ட மாடலாக ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (OPPO K13 Turbo Pro 5G) இன்று (ஆகஸ்ட் 11) வெளியாக இருக்கிறது. இந்த போனுடன் ஓப்போ கே13 டர்போ 5ஜி (OPPO K13 Turbo 5G) களமிறங்க இருக்கிறது. இந்த மாடல்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? எப்போது வெளியாகிறது? விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இன்று நண்பகல் 12 மணிக்கு ஓப்போ கே13 டர்போ 5ஜி மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ தளங்களில் முழு பீச்சர்களும் வெளியாக இருக்கின்றன. அதேபோல விற்பனை தேதி மற்றும் விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக இவை இருக்கப் போகின்றன.

மொத்த மார்கெட் மிரளும் புது OPPO போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, இந்தியாவில் நேரடியாக கூலிங் ஃபேனுடன் வெளியாகும் மாடல்களாக இந்த ஓப்போ கே13 டர்போ 5ஜி சீரிஸ் பெயர் பெற்றுள்ளன. கூலிங் ஃபேன் வருவதால், இது கேமிங் மாடல்கள் என்பது உறுதியாகும். ஆகவே, பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் பட்டையை கிளப்பி இருக்கின்றன. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது.

இதுபோக விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (In-display Fingerprint Unlock) கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. IPX6 ரேட்டிங், IPX8 ரேட்டிங் மற்றும் IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஏஐ கேமரா சிஸ்டம் உள்ளது.

மொத்த மார்கெட் மிரளும் புது OPPO போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குளோவ் மோட், ஸ்பிளாஷ் டச் மற்றும் ஸ்கிரீன் புரொடெக்சன் டிடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், அல்ட்ரா எச்டி நைட்போட்டோகிராபி, ஏஐ எடிட்டர் 2.0, ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர், ஏஐ எரைசர், ஏஐ அன்பிளர், ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக பர்சனல் கேமிங் அசிஸ்டன்ட் (Personal Gaming Assistant) கிடைக்கிறது. அதேபோல ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் வருகிறது. கலர்ஓஎஸ் 15 (Colour OS 15) கிடைக்கிறது. ஆகவே, பக்கா கேமிங் மாடல்கலாக இருப்பது உறுதியாகிறது. சில்வர் நைட், பர்பிள் பாண்டம் மற்றும் மிட்நைட் மாவரிக் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கின்றன.

ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த மாடல்களில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.

ஓப்போ கே13 டர்போ 5ஜி போனில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8460 4என்எம் (Octa Core Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. சீன மார்கெட்டில் ஓப்போ கே13 டர்போ 5ஜி போனின் விலை ரூ.25,000 பட்ஜெட்டிலும், ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.30,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இந்தியாவிலும் இதை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 Turbo Pro 5G With Cooling Fan To Launch in India Today Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X