செய்கைனா இதுதான்.. ரூ.3,000 ரேட் கட்ல 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (OPPO K13 Turbo Pro 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. மிட்-ரேஞ்ச் கேமிங் மாடலாக இருப்பதால், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், பிளாட் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லால், கூலிங் ஃபேன் கொடுக்கிறது. இந்த ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனின் விலை, தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக இப்போது வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும்.

இந்த ஓப்போ மாடலானது, இந்தியாவில் முதல் கூலிங் ஃபேன் கொண்ட ஸ்மார்ட்போனாகும். அதேபோல ரேபிட் கூலிங் என்ஜின், விசி கூலிங் போன்ற ஹீட் கன்ட்ரோல் பீச்சர்களும் கிடைக்கின்றன. இதுபோக சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களும் கேமிங்குக்கு ஏற்றபடி கிடைக்கின்றன. இதை இப்போது பார்க்கலாம்.
ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO K13 Turbo Pro 5G Specifications): இந்த ஓப்போவில் பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டுன் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிகாரன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது.

1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் கேமிங் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களும் விரும்பும்படி 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், இதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் பெற்று கொள்ளலாம்.
கேமிங் மாடலாக இருந்தும், கேமராவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 (SONY IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவுக்கு 2 எம்பி டெப்த் கேமரா சப்போர்ட் கிடைக்கிறது.
மெயின் கேமராவுக்கு கீழே கூலிங் ஃபேனை பேக் செய்துள்ளது. கேமிங்குக்கு ஏற்ப பேட்டரி கேபாசிட்டி உள்ளது. பெரிய 7000mAh பேட்டரி மற்றும் அதை உடனடியாக சார்ஜ் செய்து கொள்ளும்படி 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. அதற்கு ஏற்ப 8.31 எம்எம் தடிமன் மற்றும் 207 கிராம் எடை வருகிறது.
இந்த ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனில் இன்-டிஸ்பிளே சென்சாருடன் (In-display Sensor), இன்ஃபிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) பேக் செய்துள்ளது. அதிக டியூரபிலிட்டி கொடுக்க IPX6 ரேட்டிங், IPX8 ரேட்டிங் மற்றும் IPX9 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான டிசைனில் சில்வர் க்நைட் (Silver Knight), மிட்நைட் மேவரிக் (Midnight Maverick) மற்றும் பர்பிள் பாண்டம் (Purple Phantom) ஆகிய மூன்று கலர்களில் வாங்க கிடைக்கிறது. இதேபோல ஓப்போ கே13 டர்போ 5ஜி போனின் விற்பனையானது ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதையும் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








