நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Oppo போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (Oppo K13 Turbo Pro 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 11) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (Oppo K13 Turbo Pro 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 பிராசஸர் (Snapdragon 8s Gen 4 processor) உடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 7,000 mm² VC கூலிங் சேம்பர் சிஸ்டமை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
கலர்ஓஎஸ் (ColorOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். IPX9 வாட்டர் புரொடெக்சன் (IPX9 water protection) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
6.8-இன்ச் 1.5கே பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே (1.5K flat OLED display) உடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 பீக் நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செயய் 80W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. சில்வர் நைட் (Silver Knight), பர்பிள் பேண்டம் (Purple Phantom) மற்றும் மிட்நைட் மேவரிக் (Midnight Maverick)நிறங்களில் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒப்போ அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








