Home
Mobile

ஆகஸ்ட் அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. 16GB ரேம்.. கூலிங் ஃபேன்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மார்கெட்டும் மிரளும்படி கேமரா இருக்க வேண்டிய இடத்தில் கூலிங் ஃபேன் (Cooling Fan) கொடுத்தது மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங், 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் களமிறங்கிய ஓப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மாடலும் வெளியாக இருக்கிறது.

பிரீமியம் கேமிங் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ஓப்போ கே13 டர்போ மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ ஆகிய மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டன. ஜூலை 25ஆம் தேதி அந்த மார்கெட்டில் விற்பனை தொடங்க இருக்கிறது. இந்த போனின் பட்ஜெட் மற்றும் பீச்சர்கள் இந்திய கேமிங் பிரியர்களுக்கு பக்கா பொருத்தமாக இருப்பதால், இங்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஆகஸ்ட் அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. 16GB ரேம்!

ஆனால், இந்திய மார்கெட்டில் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. அது இப்போது Gadgets 360 மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்திய வெளியீடு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இதற்கு வாய்ப்புகளும் அதிகமாகும். ஏனென்றால், ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G), ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) ஏற்கனவே இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டன.

இதனால், ஓப்போ கே13 டர்போ சீரிஸ் மாடல்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் வெளியாக இருக்கிறது என்றால், ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஓப்போ இந்தியா நிறுவனம், தொடர்ந்து புதிய மாடல்களை இங்கு அறிமுகம் செய்து வருகிறது. இப்போது, இந்த மாடல்களுக்கு தயாராக இருக்கப் போகிறது.

ஓப்போ ஸ்மார்ட்போன்களில் கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக இவை வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. ரியர் மெயின் கேமராவுக்கு கீழ் இந்த கூலிங் ஃபேன் கிடைக்கிறது. இதன் மூலம் ஹெவி கேமிங் யூசேஜின் போதும், ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். அதேபோல பர்ஃபாமென்ஸ் லேக்-ப்ரீ அனுபவம் கொடுக்கும்.

ஆகஸ்ட் அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. 16GB ரேம்!

இந்த ஓப்போ கே13 டர்போ மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ ஆகிய மாடல்களில் சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ் பீச்சர்களை தவிர மற்றவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களில் மற்றும் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது, சீன வேரியண்ட்டின் பீச்சர்களை பார்ப்போம்.

ஓப்போ கே13 டர்போ சீரிஸ் அம்சங்கள் (OPPO K13 Turbo Specifications): டர்போ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் ( Octa Core Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. டர்போ ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8என் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. பிரீமியம் கேமிங் அவுட்புட் கிடைக்கும்.

இந்த 2 மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 50 எம்பி மெயின் + 2 எம்பி செகண்டரி கேமரா உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி மற்றும் IPX6 ரேட்டிங், IPX8 & IPX9 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 Turbo K13 Turbo Pro Tipped To Launch in India in August 2025 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X