பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா? 7000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ (Oppo) நிறுவனம் அடுத்து ஒப்போ கே13 (Oppo K13) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒப்போ கே13 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ கே13 அம்சங்கள் (Oppo K13 specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Qualcomm Snapdragon 6 Gen 4) சிப்செட் உடன் ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும்.
பல முன்னணி நிறுவனங்கள் 7000mAh பேட்டரி மற்றும் 7300mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஒப்போ நிறுவனமும் இணைந்துள்ளது. அதாவது ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ கே13 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் நிறங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த நிறங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் ஒப்போ கே13 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: tudocelular


Click it and Unblock the Notifications