Home
Mobile

வாரிட்டு போறாங்க.. ரூ.14,999-க்கு 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,000 உடனடி தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த தள்ளுபடி ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.

வாரிட்டு போறாங்க.. ரூ.14,999-க்கு 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): இந்த ஓப்போவில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) மற்றும் ஓப்போ நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது.

2 ஜெனரஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். கலர்ஓஎஸ் 15 மூலம் ஏஐ லிங்க் பூஸ்ட் 2.0 (AI LinkBoost 2.0), ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர் (AI Clarity Enhancer), ஏஐ அன்பிளர் (AI Unblur) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார் மெயின் கேமராவில் கிடைக்கிறது.

அதேபோல ஓம்னிவிஷன் ஓவி02பி1பி (OV02B1B) சென்சார், டெப்த் கேமராவிலை கிடைக்கிறது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 5700எம்எம் வேப்பர் சேம்பர் (Vapor Chamber) கொண்ட பெரிய 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 62 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். கோல்ட் மோட் (Cold Mode), சார்ஜிங் புரொடெக்சன், சார்ஜிங் அப்பர் லிமிட் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. ஹெவி கேமிங்குக்கு ஏற்ப 10.3 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் கொடுக்கும்.

இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோவுடன் (Type-C Audio) டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

பிரிசம் பிளாக் (Prism Black) மற்றும் ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் சிப்செட் கிடைப்பதால், இதில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கிடைக்கிறது. மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 5G With 8GB RAM Available At Discounted Price in Flipkart Offer Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X