Home
Mobile

விட்ராதீங்க சார்.. ரூ.20,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி ஏஐ கேமரா போன்ற பீச்சர்களுடன் ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) வெளியாக இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் இந்த ஓப்போ மாடலின் முழு பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு தேதி, விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே13 5ஜி மாடலும் இருக்கப் போகிறது. 7000mAh பேட்டரியுடன் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதியாகி இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற அனைத்து பீச்சர்களும் உறுதியாகிவிட்டன.

விட்ராதீங்க சார்.. ரூ.20,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்பிளாஷ் டச் (Splash Touch) சப்போர்ட் கிடைக்கிறது.

IP65 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. இந்த கலர்ஓஎஸ் 15 மூலம் ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர், ஏஐ அன்பிளர், ஏஐ எரைசர், ஏஐ ரிப்ளெக்சன் ரிமூவர் போன்ற கேமரா பீச்சர்களும், ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்டர், ஏஐ ரைட்டர் போன்ற மல்டி மீடியா பீச்சர்களும் கிடைக்கின்றன.

கிளியர் நைட் போட்டோஸ் மற்றும் லைவ் போட்டோ போன்ற பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த ஓப்போ கே13 5ஜி போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு அப்பர் லிமிட் புரொடெக்சன், கோல்ட் மோட் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Speakers), இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (IR Control) கிடைக்கிறது. வேப்பர் கூலிங் சேம்பேர் (Vapour Cooling Chamber) வருகிறது. இந்த ஓப்போ கே13 5ஜி போனானது, 8.45 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை வருகிறது. பிரிசம் பிளாக் (Prism Black) மற்றும் ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது.

மேற்கண்ட பீச்சர்கள் பிளிப்கார்ட் தளத்தின் மைக்ரோ சைட்டில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 21ஆம் தேதிக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் தெரிய வந்துள்ளதால், ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், பேட்டரி பேக்கப் விரும்பும் மற்ற ஸ்மார்ட்போன் கஸ்டமர்களையும் இந்த போன் தட்டித்தூக்கி இருக்கிறது.

மற்றொரு காரணமாக இந்த போனின் பட்ஜெட் செக்மெண்ட் இருக்கிறது. ஆமாம், இவ்வளவு பீச்சர்களுடன் இந்த ஓப்போ கே13 5ஜி போனானது, ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. ஆகவே, எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சீனாவில் இந்த போனானது ஓப்போ கே13எக்ஸ் மாடலாக வெளியாக இருக்கிறது. இதனாலேயே அதற்கு முன்னதாக இந்த போனின் பீச்சர்கள் வெளியாகிவிட்டன.

Best Mobiles in India

English summary
OPPO K13 5G With 7000mAh Battery 80W Charging To Launch April 21 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X