துக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16,999 போதும்.. 7000mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல் பேட்டரி பேக்கப் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான பீச்சர்களுடன் ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) களமிறங்கி இருக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் இருந்தும் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ கே13 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரூ.20,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 7000mAh பேட்டரி கேபாசிட்டி கொடுக்கும் மாடலாக இந்த ஓப்போ கே13 5ஜி கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைப்பதால் மேலும், மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): இந்த ஓப்போ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் இதில் கிடைக்கிறது.
இந்த அடிமட்ட பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. மெயின் கேமரா, டெப்த் கேமரா மற்றும் செல்பீ ஷூட்டரிலும் சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
அதேபோல ஓவி02பி1பி (OV02B1B) சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், ஏஐ எரைசர், ஏஐ அன்பிளஸ், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர், ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன.

இந்த ஓப்போ கே13 5ஜி போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், பி3 கலர் காமட் மற்றும் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Under-display Fingerprint) கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த ஓப்போவில் IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டில் யாரும் எதிர்பார்க்காதபடி 7000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ரிசம் பிளாக் (Prism Black) அல்லது ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட், ஓப்போ ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்க இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. ரூ.1000 டிஸ்கவுண்ட் ரூ.16,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இதுபோக ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இதில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








