Home
Mobile

தீபாவளிக்கு லட்டு மாதிரி ஆபர்.. ரூ.14,999 மட்ட ரேட்ல 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பேக் தீபாவளி விற்பனையில் (Big Bang Diwali Sale) ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் கொடுக்கிறது. இதுபோக அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, IP65 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் சிப்செட் கொண்ட இந்த ஓப்போ போனின் விவரங்கள் இதோ.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் பிக் பேக் தீபாவளி விற்பனையில் ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

தீபாவளிக்கு லட்டு மாதிரி ஆபர்.. ரூ.14,999 மட்ட ரேட்ல 7000mAh பேட்டரி!

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மல்டிபிள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கும் ரூ.4,250 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.8,840 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.3,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 600 நிட்ஸ் நார்மல் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் ஏஜிசி டிடி ஸ்டார்2 (AGC DT STAR2) கவர் கிளாஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டுகலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. 2 ஜெனரஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் பெற்று கொள்ளலாம். மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படியான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் (AF) மற்றும் ஈஐஎஸ் (EIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

பிக்சட்-போகஸ் (Fixed-focus) கொண்ட 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சார், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர் (AI Clarity Enhancer) மற்றும் ஏஐ அன்பிளர் (AI Unblur) போன்ற ஏஐ கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இதில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 80W பேட்டரி, 7000mAh பேட்டரி, வேப்பர் சேம்பர் மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனில் ப்ரிசம் பிளாக் (Prism Black) மற்றும் ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 5G With 50MP Camera Available Under Rs 15000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X