அடிச்சு தூக்கிய பிளிப்கார்ட்.. ரூ.16,499 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் போக அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) போனானது வாங்க கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கல் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட போனை பட்ஜெட் விலைக்கு ஆர்டர் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த ஓப்போ கே13 5ஜி போன் பக்காவான தேர்வாக இருக்கும். ஏனென்றால், 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அவ்வளவு பெரிய பேட்டரியை உடனடியாக சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளாப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஓப்போ கே13 5ஜி போனை ரூ.16,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டானது மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,999 ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்டுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், இதே ரூ.1,500 டிஸ்கவுண்ட்டானது, ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ரூ.9,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.
விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) மற்றும் பெரிய பேட்டரி வருவதால், சூப்பர் ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், சார்ஜிங் அப்பர் லிமிட் புரொடெக்சன், கோல்ட் மோட் (Cold Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஜிசி டிடி ஸ்டார்2 (AGC DT STAR2) டிஸ்பிளே புரொடெக்சன் கிடைக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): ரூ.20,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைத்தாலும், இந்த ஓப்போவில் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (4nm Octa Core Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன அப்டேட் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது.
மேலும், 3 வருட செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஓரளவு கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ கே13 5ஜி போனில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ உள்ளது.
டிஸ்பிளேவிலும் குறை சொல்ல முடியாது, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








