பொங்கலுக்கு தூள் கிளப்பும் ஆர்டர்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Oppo போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட்டில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதி ஓப்போ கே13 5ஜி போனில் உள்ளது. 2400 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பி3 கலர் காமட்உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. மேலும் இதில் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Under-display Fingerprint) கிடைக்கிறது.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் உடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங்களை ஆப்களை தடையின்றி இந்த போனில் பயன்படுத்தலாம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மூலம் ஓப்போ கே13 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.
இந்த ஒப்போ போன் 50 எம்பி ஓவி50டி40 (OV50D40) மெயின் கேமரா + 2 எம்பிஓவி02பி1பி (OV02B1B) டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஏஐ எரைசர், ஏஐ அன்பிளஸ், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸர், ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் போன்ற பீச்சர்களும் இந்த போனில் கிடைக்கின்றன.
அதுவும் 7000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். ப்ரிசம் பிளாக் (Prism Black) அல்லது ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
குறிப்பாக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஓப்போவில் IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








