ஏப்ரல் 21 உறுதி.. 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் புது OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 21-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மேம்பட்ட AI அம்சங்கள், 50எம்பி கேமரா, அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ கே13 5ஜி அம்சங்கள் (Oppo K13 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் குளோபல் பீக் பிரைட்னஸ் (1200 nits global peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும்.
ஏஐ ரைட்டர் (AI Writer), ஏஐ சம்மரி (AI summary) போன்ற பல ஏஐ (AI) அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Qualcomm Snapdragon 6 Gen 4) சிப்செட் உடன் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
7000mAh பேட்டரி உடன் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ColorOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ஒப்போ கே13 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (stereo speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் இந்த புதிய ஒப்போ கே13 5ஜி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப்ரிசம் பிளாக் (Prism Black) மற்றும் ஐசி பர்பிள் (Icy Purple) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.20,000 பட்ஜெட்டில் இந்த ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications