Home
Mobile

செம்ம டிமாண்ட்! மீண்டும் மே 1 முதல் SALE! இந்தியர்கள் அடிச்சு புடிச்சு வாங்கிய OPPO-வின் 7000mAh பேட்டரி போன்!

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமான ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) மாடல், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் நாள் விற்பனையின் போது, சில மணி நேரங்களுக்குள் முழுமையாக விற்றுத்தீர்ந்ததாக பிளிப்கார்ட் அறிவித்து உள்ளது.

பிளிப்கார்ட் தளத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் - ரூ.20,000 க்கும் குறைவான பிரிவில் ஒப்போவின் வளர்ந்து வரும் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது பிரீமியம் அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான விலையின் கலவையை வழங்குகிறது. இப்போதைக்கு கே13 யிருப்பில் இல்லை. 2025 மே 1 ஆம் தேதி மீண்டும் வாங்குவதற்கு கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செம்ம டிமாண்ட்.. மீண்டும் மே 1 முதல் SALE.. OPPO-வின் 7000mAh போன்!

இந்தியாவில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். அதே ரேம் கொண்ட 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இத ஸ்மார்ட்போன் Icy Purple மற்றும் Prism Black ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற மே 1 ஆம் தேதி முதல் ஒப்போ இந்தியா வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக மீண்டும் விற்பனைக்கு வரும்.

ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- 120ஹெர்ட்ஸ் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- அட்ரினோ A810 ஜிபியு உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆட்டோஃபோகஸ் கொண்ட 50 மெகாபிக்சல் OV50D40 சென்சார்
- 2 மெகாபிக்சல் OV02B1B இரண்டாம் நிலை கேமரா
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி

ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வரும் முன்பே, அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதியே சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் என்பதும் இதுவும் கிட்டத்தட்ட ரூ.20,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடததக்கது. டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, சிஎம்எப் போன் 2 ப்ரோவின் விலை சுமார் ரூ.20,000 ஆக இருக்கலாம்.

இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் மாடலின் விலையாக இருக்க வேண்டும். நினைவூட்டம் வண்ணம் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.15,999 க்கு அறிமுகமானது. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ.20,000 க்கும் சற்று அதிகமாக இருக்கலாம். சரியான விலை நிர்ணயம் ஏப்ரல் 28 நடக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது தெரிய வரும்.

சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது?
- ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர்களில் டூயல்-டோன் பேக் பேனல்
- பேனலின் மேல் பாதி ஆனது லைட்டர் ஷேட்-ஐ கொண்டுள்ளது, அதே நேரத்தில் கீழ் பாதி டார்க் ஷேட்-ஐ கொண்டுள்ளது.
- பேக் பேனலில் நான்கு ஸ்க்ரூ பாயிண்ட்கள்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1/1.57-இன்ச் சென்சார் உடனான 50எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்
- 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ்
- 119.5° பீல்ட் ஆப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K13 5G High Demand in India Next Flipkart Sale Date Announced Its May 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X