மார்கெட் அலறும்.. ரூ.14985 போதும்.. OLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, 1 டிபி மெமரி, 50 எம்பி கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொண்ட ஓப்போ கே12எக்ஸ் (OPPO K12x) போன் நம்ப முடியாத பட்ஜெட்டில் களமிறங்கியிருக்கிறது.
ஓப்போ கே12எக்ஸ் அம்சங்கள் (OPPO K12x Specifications): அல்ட்ரா பிரீமியம் டிசைனில் கன்டென்செட் கிரீன் (Condensed Green) மற்றும் டைட்டானியம் ஸ்கை கிரே (Titanium Sky Gray) கலர்கள் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இந்த ஓப்போவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டிஸ்பிளே பீச்சர்கள் பின்னிப்பெடல் எடுத்துள்ளன. ஆகவே, 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.
மேலும், 1200 பீக் பிரைட்னஸ், டிசிஐ பி-3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் டிடி ஸ்டார்2 புரொடெக்சன் (DT-Star2 Protection) கொண்டிருக்கிறது. இந்த ஓப்போவில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம். இந்த ஓப்போ கே12எக்ஸ் போனில் ஆண்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) உடன் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) வருகிறது.

கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது. இதுவொரு 5ஜி சிப்செட் மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த ஓப்போ கே12எக்ஸ் போனில் பிரீமியம் பேட்டரி சிஸ்டம் வருகிறது. ஆகவே, 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 8.1 மிமீ தடிமன் மற்றும் 191 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த ஓப்போ கே12எக்ஸ் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,985ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,295ஆகவும் இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.20,755ஆகவும் இருக்கிறது. முதலில் சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் மே 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அதன் பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








