பொளந்து கட்டுது பட்ஜெட்.. வெறும் ரூ.10,999 போதும்.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பாண்டா கிளாஸ் புரொடெக்சன் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 32 எம்பி கேமரா, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியுடன் வெளியான ஓப்போ கே12எக்ஸ் (OPPO K12x) போனின் புதிய கலர் வேரியண்ட் அடிமட்ட விலைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ஓப்போ கே12எக்ஸ் போனின் விற்பனை எப்போது? பீச்சர்கள் எப்படி? விலை என்ன? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
இந்த ஓப்போ கே12எக்ஸ் ஃபெதர் பிங்க் போனானது, வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. அதாவது, பிளிப்காக்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) டிஸ்கவுண்ட் விலையில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.12,999 விலையிலான இந்த போன் ரூ.10,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

ஓப்போ கே12எக்ஸ் அம்சங்கள் (OPPO K12x Specifications): இந்த ஓப்போவில் கலரில் மட்டுமே மாறி இருக்கிறது. பீச்சர்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆகவே, பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
அதேபோல 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஓப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் கலர் ஓஎஸ் 14 (Color OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் ஆர்டருக்கு வர இருக்கிறது.
இந்த ஓப்போ கே12எக்ஸ் போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. நைட் போட்டோகிராபிக்காக சர்க்கிள் எல்இடி வருகிறது. கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சாருடன் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் கேலக்ஸிகோர் (GalaxyCore GC02M1B) சென்சாருடன் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது.

அதேபோல கேலக்ஸிகோர் ஜிசி08ஏ8 டபுள்யூஏ1எக்ஸ்ஏ (GalaxyCore GC08A8 WA1XA) சென்சார் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியை கொடுக்கிறது. ஆகவே, லாங்-லாஸ்டிங் யூசேஜ் எதிர்பார்க்கலாம். பேட்டரி சிஸ்டம் பட்ஜெட்டைவிட கூடுதலாகவே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) மற்றும் 5100mAh பேட்டரி வருகிறது.
இந்த ஃபெதர் பிங்க் கலர் வேரியண்ட் மட்டுமல்லாமல், பிரீஸ் ப்ளூ (Breeze Blue) மற்றும் மிட்நைட் வயலெட் (Midnight Violet) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. செப்டம்பர் 26ஆம் தேதி பிளிப்கார்ட் பிளஸ் கஸ்டமர்களுக்கு (Flipkart Plus Customers) முதலில் ஃபெதர் பிங்க் கலர் வேரியண்ட்டின் விற்பனை தொடங்குகிறது.
மற்ற கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரையில் விற்பனை தொடங்க இருக்கிறது. அடிமட்ட விலையில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, பக்கா கேமரா மற்றும் பேட்டரி சிஸ்டம் கொண்ட போன் வேண்டுமானால், இந்த ஓப்போ கே12எக்ஸ் போனை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications