இறங்கி அடிச்ச பிளிப்கார்ட்.. 5100mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஒப்போ போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. எனவே இந்நிறுவனங்கள் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஒரு அசத்தலான ஒப்போ 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. கலர் ஓஎஸ்14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 1604 x 720 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன், ஐ கம்போர்ட் மோட் (Eye Comport Mode) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
பேட்டரி பர்ஃபாமென்ஸ், ஃபாஸ்ட் ஆப் லோட் போன்றவற்றுக்காக டிரினிட்டி என்ஜின் (Trity Engine) சப்போர்ட் கொண்டுள்ளது ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
32 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GalaxyCore GC02M1B) சென்சார் கொண்ட 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) என்கிற டூயல் கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் கொண்டுள்ளதால் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
5100mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன். மேலும் 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








