Home
Mobile

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.11,999 போதும்.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. மிலிட்டரி-கிரேடு.. எந்த மாடல்?

இந்திய மார்கெட் மிரளும்படியான பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட பாடி மட்டுமல்லாமல், ஸ்பிளாஷ் டச் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5100mAh பேட்டரி, 1 டிபி மெமரி, 16 ஜிபி ரேம் மற்றும் ஏஐ கேமரா பீச்சர்கள் கொண்ட ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய ஓப்போ கே12எக்ஸ் 5ஜி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): இந்த ஓப்போவில் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஐ கம்போர்ட் மோட் (Eye Comport Mode) வருகிறது.

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.11,999 போதும்.. 5100mAh பேட்டரி மாடல்!

ஸ்பிளாஷ் டச் சப்போர்ட் உள்ளது. கலர் ஓஎஸ்14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. இதுபோக பேட்டரி பர்ஃபாமென்ஸ், ஃபாஸ்ட் ஆப் லோட் போன்றவற்றுக்காக டிரினிட்டி என்ஜின் (Trity Engine) சப்போர்ட் வருகிறது.

இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேலும், இந்த ஓப்போவில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது.

45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனானது, பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் சென்சார்கள் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது.

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.11,999 போதும்.. 5100mAh பேட்டரி மாடல்!

ஆகவே, கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சார் 32 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GalaxyCore GC02M1B) சென்சார் கொண்ட 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல ஜிசி08ஏ8-டபுள்யூஏ1எக்ஸ்ஏ (GC08A8-WA1XA) சென்சார் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் வருகிறது. இதுபோக IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 186 கிராம் எடை மற்றும் 7.68 தடிமன் வருகிறது.

இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. பிரீஸ் ப்ளூ (Breeze Blue) மற்றும் மிட்நைட் வயலெட் (Midnight Violet) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 15,999ஆக இருக்கிறது. இருப்பினும், எச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை வருகிறது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K12x 5G With 8GB RAM, 32MP Camera Launched Sale From August 2 On Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X