பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.11,999 போதும்.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 32MP கேமரா.. எந்த மாடல்?
பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுப்பது மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், கேலக்ஸிகோர் சென்சார் மெயின் கேமரா, 5100mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 7.68 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கும் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனுக்கு கிடைக்கும் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த போனுக்கு MIL-STD-810H சர்டிஃபைடு மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைப்பதால், 360 டிகிரி டேமேஜ் ஃப்ரூப் கிடைக்கிறது. இதுபோக IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஆகவே, ஸ்பிளாஷ் டச் (Splash Touch) கிடைக்கிறது. இதன் மூலம் டிஸ்பிளேவில் வெட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. டியூரபிலிட்டி அதிகம் கொண்ட மாடலாக வருகிறது.

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): குவாலிட்டியான பாடி கிடைப்பதால், டிஸ்பிளேவுக்கும் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கிடைக்கிறது. 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டில்பிளே, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.
இதுபோக 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொண்ட டிஸ்பிளேவை பார்க்க முடிகிறது. இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி அல்லது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆப்ஷனில் கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் எக்ஸ்பான்சன் கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. 2025ஆம் ஆண்டில் வெளியாகும் பட்ஜெட் மாடல்களில் பலவற்றில் இந்த சிப்செட்டை அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த போன் ஒரு வருடத்துக்கு முன்பு வெளியாகியும், இந்த சிப்செட்டை பேக் செய்துள்ளது. கலர்ஓஎஸ் 14 (Color OS 14), ஆண்ட்ராய்டு ஓஎஸ் 14 (Android 14 OS) உள்ளது.

இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் பேட்டரி சிஸ்டமானது, மற்றொரு ஹைலைட் பீச்சராக இருக்கிறது. ஏனென்றால், 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும், 7.68 மிமீ தடிமன் மற்றும் 186 எடையில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 32 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
மெயின் மற்றும் செல்பீ ஷூட்டரில் கேலக்ஸிகோர் சென்சார்கள் வருகின்றன. பிரீஸ் ப்ளூ (Breeze Blue) அல்லது மிட்நைட் வயலெட் (Midnight Violet) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஓப்போவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ,15,999ஆக உள்ளது.
இப்போது, 2 மாடல்களுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் டிஸ்பிளே, பேட்டரி மட்டுமல்லாமல், அதிக டியூரபிலிட்டி கொடுக்கும் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். இதுபோன்ற செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications