அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.12,350 பட்ஜெட்ல 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 32MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் கேலக்ஸிகோர் சென்சார் கேமரா மட்டுமல்லாமல், 5100mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பாண்டா கிளாஸ் டிஸ்பிளே புரொடெக்சன் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 கொண்ட இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனின் விலை, தள்ளுபடி மற்றும் முழு பீச்சர் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.650 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக இப்போது வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,349 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்கு பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக ஓப்போ கே12எக்ஸ் 5ஜி இருக்கிறது. ஏனென்றால், டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.
ஆகவே, 360 டிகிரியில் ஆர்மர் பாடி அவுட்புட் கிடைக்கிறது. மேலும், ஸ்பிளாஷ் டச் (Splash Touch) கிடைப்பதால், டிஸ்பிளேவில் மழைத்துளி பட்டாலும் டச் சப்போர்ட் கிடைக்கும். அதேபோல வெட் ஹேண்ட் இருப்பினும் டச் வேலை செய்யும். இப்படி ஒட்டுமொத்தமாக டிசைனில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான டியூரபிலிட்டி கொடுத்துள்ளது. மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): இந்த ஓப்போவில் பாண்டா கிளாஸ் புரொடெக்சன் மட்டுமல்லாமல், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். கலர்ஓஎஸ் 14 (Color OS 14) உள்ளது.
கொஞ்சம் பழைய யுஐ கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைத்து இருக்கிறது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், மற்றொரு வேரியண்ட் கிடைக்கிறது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோர்ஜ் கொண்ட வேரியண்ட் வருகிறது. 6 ஜிபி ரேம் அல்லது 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போனில் டூயல் கேமரா சிஸ்டம் கிடைத்தாலும், அதில் கேலக்ஸி கோர் (Galaxycore) சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
32 எம்பி மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 சென்சார் மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி சென்சார் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி செல்பீ கேமராவிலும் கூட கேலக்ஸிகோர் ஜிசி08ஏ8 சென்சார் வருகிறது. இந்த ஓப்போவில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5100mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, பேக்கப் தரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








