Home
Mobile

பிங்க் கலர்ல.. ரூ.12,000 பட்ஜெட்ல.. செப்.21-ல் அறிமுகமாகும் OPPO 5G போன்.. என்ன மாடல்?

OPPO K12x 5G: இந்தியாவில் அறிமுகம் செய்து 2 மாதங்களுக்கு பிறகு, ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷனை வெளிப்படுத்தி உள்ளது. அது ஃபெதர் பிங்க் கலர் (Feather Pink Color) ஆப்ஷனாகும். இது வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ இந்தியா (Oppo India) இணையதளம் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய பிங்க் கலர் ஆப்ஷன் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

பிங்க் கலர்ல.. செப்.21-ல் அறிமுகமாகும் OPPO 5G போன்.. என்ன மாடல்?

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைத்தாலும் கூட, இது மிகவும் கடினமான 5ஜி ஸ்மார்ட்போனாக உள்ளது. இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனை மட்டுமின்றி, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி பாலிகார்பனேட் பாடியையும் கொண்டு உள்ளது.

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட், 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5100mAh பேட்டரி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, 32எம்பி ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது.

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1000 nits peak brightnes), பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் (Panda Glass protection) உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 அனுப்பப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 2எம்பி போர்ட்ரெய்ட் சென்சிங் யூனிட்டுடன் 32எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh செல்லை பேக் செய்கிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் Uயூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஐபி54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் MIL-STD-810H இராணுவ தர நீடித்து நிலைத்திருக்கும் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 186 கிராம் ஆகும், அளவீட்டில் இது 7.68 மிமீ தடிமன் உள்ளது!

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய பிங்க் கலர் ஆப்ஷனின் விலை நிர்ணயம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இது பெரும்பாலும் எந்த விதமான விலை அதிகரிப்பையும் காணாது.

இது ஏற்கனவே வாங்க கிடைக்கும் ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் கலர் ஆப்ஷன்களின் விலைக்கே தான் விற்பனை செய்யப்ப்படும். நினைவூட்டும் வண்னம் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO K12x 5G New Feather Pink Color Variant Launching in India on September 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X