Home
Mobile

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.10,999 பட்ஜெட்ல 45W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (OPPO K12x 5G) ஸ்மார்ட்போனுக்கும தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.10,999 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது ஒப்போ கே12எக்ஸ் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்..

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K12x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி வெளிவந்துள்ளது. கலர் ஓஎஸ்14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பேட்டரி பர்ஃபாமென்ஸ், ஃபாஸ்ட் ஆப் லோட் போன்றவற்றுக்காக டிரினிட்டி என்ஜின் (Trity Engine) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. 1604 x 720 பிக்சல்ஸ் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சன், ஐ கம்போர்ட் மோட் (Eye Comport Mode) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த ஓப்போ கே12எக்ஸ் 5ஜி போன் ஆனது கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சார் 32 எம்பி மெயின் கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GalaxyCore GC02M1B) சென்சார் கொண்ட 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) என்கிற டூயல் கேமரா கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ஒப்போ 5ஜி போன்..

மேலும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட் கொண்டுள்ளதால் இந்த போனை நம்பி வாங்கலாம். பின்பு IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஓப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5100mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். எனவே 30 நிமிடங்களில் இந்த போனை 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம். அதேபோல 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K12x 5G is available at 35 percent discount in Flipkart Big Billion Days sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X