இப்படி ஒரு OPPO 5G போனுக்கு தான் மொத்த இந்தியாவும் வெயிட்டிங்.. ஜூலை 29 அறிமுகம்.. என்ன மாடல்?
கொஞ்சம் 'பெட்டர்' ஆன கேமராக்களை பேக் செய்வதன் மூலம் மட்டுமே இந்திய மொபைல் சந்தையில் வண்டி ஒட்டிவிட முடியாது. கேமராக்களுடன் சேர்த்து மற்ற அம்சங்களும் கூட பவர்ஃபுல் ஆக இருக்க வேண்டும் என்பதை ஒப்போ நிறுவனம் புரிந்து கொண்டு பல மாதங்கள் ஆகிறது. அந்த புரிதலின் கீழ் சில நல்ல மாடல்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகமாகி விட்டன. அந்த வரிசையில் இன்னொரு புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 29-ல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகி பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்று டீஸ் செய்யப்பட்ட மறுநாளே, ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே12எக்ஸ் 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த 2024 மே மாதமே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதால், இது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. சீனாவில் அறிமுகமான அதே வேரியண்ட் தான் இந்திய சந்தைக்கும் வருகிறது
ஒப்போ நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இது ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த மாடல் 7.68மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி (Ultra slim body) மற்றும் 186 கிராம் எடை உடையதாக இருக்கும்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சீன வேரியண்ட் ஆனது கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போனின் அம்சங்களை பகிர்ந்துகொள்கிறது. எனவே ஒப்போ கே12எக்ஸ்-ன் இந்திய வேரியண்ட் ஆனது பெரும்பாலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
அதாவது இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட பெரும்பாலான அம்சங்கள் ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போனிலும் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமானது.
பேக் பேனலில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கடைசியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,500mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.
ஒப்போ கே12எக்ஸ் என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில் ரூ,25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். ஏனென்றால் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று ஒப்போ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான ரெனோ சீரீஸின் கீழ் ஒப்போ ரெனோ 12 5ஜி (Oppo Reno 12 5G) மற்றும் ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி (Oppo Reno 12 Pro 5G) மாடல்களை அறிமுகம் செய்திருந்தது.
விலையை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.36,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.40,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பேஸ் பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் கலர்களில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது.
மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸ்ட்ரோ சில்வர், மேட் பிரவுன் மற்றும் சன்செட் பீச் கலர்களில் வருகிற ஜூலை 25 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications








